சட்டப்பேரவையில் பொது அறக்கட்டளை மசோதா வாபஸ்

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு பொது அறக்கட்டளைகள் சட்ட மசோதா நேற்று பேரவையில் திரும்பப் பெறப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு பொது அறக்கட்டளைகள் சட்ட மசோதாவை சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி கொண்டுவந்தார்.

அவர் பேசும்போது, ‘‘தமிழகத்தில் பொது அறக்கட்டளைகளுக்கு தனியான சட்டம் இல்லை.எனவே, அறக்கட்டளைகள் உருவாக்கம், இடம், நிர்வாகிகளுக்கான தகுதிகள், அதன் பணிகள், நோக்கம் உள்ளிட்டவற்றை வரையறுக்கும் வகையில் இந்த சட்டம்கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிகவும் பழமையான பல அறக்கட்டளைகள் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அதில் இருந்து மாறிதற்போது நீதிமன்றத்தில் பல வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அந்த நிலையை மாற்றவே இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

பின்னர் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த மசோதாவை திரும்பப் பெறும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று அறிமுகம் செய்தார்.

பின்னர் அது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்