தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி தொடக்கம்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தாய்ப்பால் வங்கி அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவுக்கு ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார்.

எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன் முன்னிலை வகித்தனர். தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார். 200 லிட்டர் தாய்ப்பாலை 6 மாதங்கள் பாதுகாப்பாக சேமித்து வைக்கும் திறன் கொண்டதாக இந்த வங்கி அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி- பாளையங் கோட்டை சாலைக்கு தமிழ்ச்சாலை என பெயரிடப்பட்டுள்ளது. இவ் விழாவில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு தமிழ்ச்சாலை பெயர் பலகையை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் கூறும்போது, “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, வழக்குகளை ரத்து செய்வது குறித்து தன்னிச்சையாக முடிவு செய்ய முடியாது. சட்டரீதியாக ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்