உசிலம்பட்டியில் பெண் சிசுக் கொலை: பாட்டி நாகம்மாள் கைது

By செய்திப்பிரிவு

உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறை பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி(32). வேன் ஓட்டுநர். இவரது மனைவி சிவபிரியங்கா(28). இவர்களுக்கு ஏற்கெனவே 7 மற்றும் 2 வயதில் பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சிவபிரியங்காவுக்கு மூன்றாவது பெண் குழந்தை பிப்.12-ம் தேதி பிறந்தது. அக்குழந்தை பிப். 17-ம் தேதி மர்மமான முறையில் இறந்தது.

மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த பிரேதப் பரிசோதனையில் குழந்தை மூச்சு திணறடிக்கப்பட்டு இறந்திருப்பதாகத் தெரியவந்தது. இது கொலை வழக்காக மாற்றப்பட்டு சின்னச்சாமியின் தாயார் நாகம்மாளை(55) போலீஸார் கைது செய்தனர். நாகம்மாள் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில்: என் மகனுக்கு ஏற்கெனவே 7 வயதில் பெண் குழந்தை குறைபாடுடன் நடக்க முடியாமல் உள்ளது. அடுத்து 2 வயது பெண் குழந்தையும் பேச முடியாமல் உள்ளது. தற்போது 3-வதாக பிறந்த பெண் குழந்தைக்கும் உடல் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தில் நான்தான் கொலை செய்தேன் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்