கொடைக்கானல் மலையில் விமரிசையாக நடந்த பழங்குடியின மக்களின் பீமன் வழிபாடு  

By செய்திப்பிரிவு

பழங்குடி இனமக்களின் பாரம்பரிய 6 அடி பீமன் சிலை வழிபாடு பேத்துப் பாறை மலைக்கிராமம் அருகே வனப் பகுதிக்குள் நடந்தது. பழங்குடி இன மக்களின் வாத்தியங்கள் முழங்க வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக் கானல் மலைப்பகுதியில் உள்ள பேத்துப்பாறை கிராமம் அருகே வனப்பகுதியில் பழங்குடியினர் வழிபடும் 6 அடி உயர பீமன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி கடந்து செல்ல வேண்டும்.
விவசாயம் செழிப்பதற்கும், நலமுடன் மக்கள் வாழவும் ஆண்டுதோறும் இங்கு விழா எடுக்கப்படுகிறது.

பழங்குடி இன மக்களுடன் இணைந்து பேத்துப்பாறை கிராம மக்களும் இந்த வழிபாட்டில் கலந்துகொள்கின்றனர்.

இந்த ஆண்டிற்கான பாரம்பரிய திருவிழாவில் சிரமப்பட்டு ஆற்றை கடந்து வனப்பகுதிக்குள் உள்ள பீமன் கோயிலை அடைந்தனர். பழங்குடி இன மக்களின் பழங்கால இசை வாத்தியங்களுடன் விழா தொடங்கியது. ஆடு, சேவல்களை படையலிட்டு வழி
பட்டனர். பின்னர் சமைத்து பக்தர்கள் அனைவருக்கும் வழங்கினர்.

பழங்காலத்தில் பழங்குடி இன மக்கள் வனப்பகுதிக்குள் தேன் எடுக்க சென்றபோது அங்கு வந்த பீமன் பசியுடன் இருந்ததாகவும், அவருக்கு பழங்குடியின மக்கள் தேன் வழங்கியதால் பசியாறி, உணவளித்த உங்களுக்கு என்றும் காவலாக இருப்பேன் என கூறியதாக ஐதீகம். தங்களை காத்து நிற்கும் பீமனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த விழா நடத்தப்படுவதாக பழங்குடி மக்கள் கூறுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

55 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்