தமிழக அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் குறித்து விவாதம்

By செய்திப்பிரிவு

இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறும் திட்டங்கள் குறித்து விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடக்கிறது.

தமிழகத்தில் தற்போதுள்ள 15-வது சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் வரும் மே மாதம் முடிவடைகிறது. இதையடுத்து, சட்டப்பேரவைக்கு ஏப்ரல் இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையமும், தேர்தல் பிரச்சாரத்தை அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டன.

பொதுத்தேர்தல் நடக்க உள்ளதால், தற்போதுள்ள அரசால் இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இயலாது. மாறாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், பிப்ரவரி 2-ம் தேதி ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் உரையுடன் தொடங்கு கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்து சில தினங்கள் நடக்கும். அதைத் தொடர்ந்து, இடைக் கால பட்ஜெட்டை பேரவையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.

தேர்தலையொட்டி, பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய திட்டங்கள், ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள திட்டங்களை தொடர அமைச்சரவையின் ஒப்புதல் தேவைப்படும்.

இதுதவிர,ஆளுநர் உரையில் இடம்பெறும் திட்டங்களுக்கும் அமைச் சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமை யில் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

இதில் துணை முதல்வர் ஓ.பன் னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் கே.சண்முகம், நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய துறைகளின் செயலர்கள் பங்கேற்க உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்