தொடுதிரை மூலம் மாணவர்களின் கற்றல் திறன்; அரசு பள்ளி ஆசிரியரின் புதிய முயற்சி: திருப்பத்தூர் ஆட்சியர் சிவன் அருள் பாராட்டு

By செய்திப்பிரிவு

தொடுதிரை மூலம் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் அரசு பள்ளி ஆசிரியர் புதிய முயற்சியை கண்டுபிடித்துள்ளார்.

திருப்பத்தூர் கல்வி மாவட்டம் கற்றலில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகிறது. குறிப்பாக, நாட்றாம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிந்திகாமணி பெண்டா மலைப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் புதிய கற்றல் தொழில்நுட்பங்களை கொண்டு எளிய முறையில் கற்றல் முறை களை உருவாக்கியதில் தமிழகத் திலேயே முன்னோடி அரசுப்பள்ளி யாக திகழ்கிறது.

இப்பள்ளியில் ஆங்கில பட்ட தாரி ஆசிரியராக பணியாற்றி வரும் அருண்குமார் (39) என்பவர், தொடு திரை மூலம் மாணவர்களே தாமாக கல்வி கற்கும் புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளார்.

மாணவர்கள் தாங்கள் விரும் பிய பாடங்களை தொடுதிரை மூலம் தங்களது கை விரல் களால் புத்தகங்களை கொண்டு பாடங்களை படிக்கும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு மிகப்பெரிய தொடுதிரை மேசையை (55 இன்ச்) அருண் குமார் உருவாக்கியுள்ளார்.

இது போன்ற முயற்சியை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி களில் அறிமுகம் செய்தால் ஆசிரி யர்களின் கற்பித்தல் நேரம் குறைந்து, மாணவர்கள் தாமாகவே கற்கும் நேரம் அதிகமாகும்.அதேநேரத்தில் கற்றலும் மாணவர் களுக்கு எளிமையாகும் என தமிழக அரசின் ‘கனவு ஆசிரியர்’ விருது பெற்ற ஆசிரியர் அருண்குமார் தெரிவித்தார்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை நாளிதழிடம்’ பட்டதாரி ஆசிரியர் அருண்குமார் கூறும் போது, ‘‘நாட்றாம்பள்ளி அடுத்த சிந்தகாமணி பெண்டா மலைப்பகுதியில் கல்வி அறிவு குறைவாக உள்ள மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குழந்தைகள் கற்றலில் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு புதிய முயற்சிகளை உருவாக்கப்பட்டுள்ளது.

உலகமே கணினி மயமாக மாறிவிட்டது. கணினி இருந்தால் உலகம் உள்ளங்கையில் இருப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படும். அதேபோல, மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை கொண்டு கல்வி அறிவை புகுத்த புதிய முயற்சிகளை மேற் கொண்டோம்.

அதன்படி, கற்றலில் விளை யாட்டு மூலம் கல்வியினை எளிமைப் படுத்த புதிய முயற்சி எடுத்து அதில் எங்கள் பள்ளி வெற்றியும் பெற்றுள்ளது. எங்கள் பள்ளி மாணவர் ஒருவர் தொடுதிரை மூலம் விளையாட்டினை உருவாக்கி அதன் மூலம் கல்வி பயிலும் புதிய முறையை உருவாக்கியுள்ளேன்.

தமிழகத்தில் முதல் முறையாக...

அதேபோல, தமிழகத்தில் முதல் முறையாக இப்பள்ளியில் தொடு திரை மூலம் (Intractive white Board) புதிய முறை கல்வியை வகுப்பறையில் உருவாக்கி கல்வியில் புதுமை செய்யப்பட்டுள்ளது. தற்போது, புதிய முயற்சியாக கற்றலை எளிமையாக்கி மாணவர்களை தன்வயப்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கி, ஒரு வகுப்பறையை கணினிவழி கற்றலுக்கு வடிவமைத்து அனைத்து பாடங்களையும் எளிய முறையில் கற்கும் புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளேன்.

அதாவது, தொடுதிரை மூலம் மாணவர்களே தாமாக கல்வி கற்கும்படி பெரிய அளவிலான மேசை போன்ற தொடுதிரை தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளேன். இதை உருவாக்க ரூ.30 ஆயிரம் செலவானது.

இதற்காக தனி சாப்ட்வேர் இல்லை, ஆன்ட்ராய்டு, ஆப்பிள்,விண்டோஸ் உள்ளிட்ட அனைத் திலும் இந்த தொழில்நுட்பத்தை புகுத்தலாம். தொடுதிரை மூலம் மாணவர்கள் கல்வி கற்கும்போது மாணவர்களின் கல்வி ஆர்வம் அதிகரிக்கும். தொடுதிரையை மாணவர்கள் தங்கள் கைவிரல் களால் தொட்டவுடன் அவர்கள் விரும்பிய பாடங்களை புத்தகங் களை கொண்டு படிக்கலாம். கணினி வழியில் கல்வி கற்பதால் மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வம் மேலோங்கும், உலகமே தங்களது உள்ளங்கையில் இருப்பது போன்ற உணர்வு மாணவர்களிடம் இருக்கும்.

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் இந்த தொடுதிரை மூலம் கல்வி கற்கலாம். கடினமான பாடங்களையும் எளியமுறையில் கற்க தொடுதிரை தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த தொழில் நுட்பத்தை கொண்டு வந் தால் மாணவர் களுக்கு கல்வி மேல் உள்ள ஈர்ப்பு மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

அதேபோல, கால மாற்றத் துக்கு ஏற்ப மாணவர்களை நாம் உருவாக்க வேண்டியது கட்டாயமாகிறது’’ என்றார்.

தொடுதிரை தொழில்நுட்பம் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் குறித்த விளக்கப் பயிற்சி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை மற்றும் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடுதிரை மூலம் கல்வி கற்பது குறித்து ஆசிரியர் அருண்குமார் விளக்கினார். திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் இது போன்ற தொடு திரை மேசையை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் சிவன் அருள் உறுதியளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

சினிமா

25 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

9 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

மேலும்