நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: குருமூர்த்திக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி கோரும் விண்ணப்பத்தின் விசாரணைக்காக துக்ளக் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி நேரில் ஆஜராகும்படி தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

துக்ளக் பத்திரிகையை நிறுவி, அதன் ஆசிரியராக இருந்த சோ அனைவரும் மதிக்கப்படும் அரசியல் விமர்சகராக இருந்தார். அனைத்துக் கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் இருந்தனர். ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று துக்ளக் ஆண்டு விழா நடக்கும். அப்போது துக்ளக் வாசகர்களுடன் உரையாடுவதையும், அவர்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பதையும் அவர் வாடிக்கையாக வைத்திருந்தார்.

அப்போது அவர் கூறும் கருத்துகள் நகைச்சுவையுடனும், ஏற்கும்படியாகவும் இருக்கும் என்பதால் அனைவரும் அவரது பேச்சைக் கூர்ந்து கவனிப்பார்கள். சோவின் மறைவுக்குப் பின் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் ஆடிட்டர் குருமூர்த்தி. அவர் சோ பாணியில் அரசியல் பேசினார்.

சாக்கடையை எடுத்து அவசரத்திற்குத் தீயை அணைக்கப் பயன்படுத்தலாம் என அதிமுக கூட்டணியையும், அதிமுகவில் சசிகலா இணைந்தாலும் பயன்படுத்தலாம் என்கிற ரீதியில் குருமூர்த்தி பேசியதால் சசிகலா தரப்பிலும் கண்டனம் எழுந்தது.

அதே கூட்டத்தில் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்தும் குருமூர்த்தி பேசியது சர்ச்சையை எழுப்பியது. நீதிபதிகள் நியமனம் குறித்தும், நேர்மை குறித்தும், தீர்ப்புகள் குறித்தும் விமர்சிப்பதா என அவருக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி, குருமூர்த்தியின் விமர்சனம் குறித்துத் தெரிவித்து, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், துக்ளக் ஆண்டு விழாவில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி, நீதிபதிகள் நியமனம், அதுகுறித்த விமர்சனம் பற்றிப் பேசியது நீதித்துறையை அவமதிக்கும் செயல். இதுகுறித்து நீதிமன்றம் குருமூர்த்தி மீது தாமாக முன்வந்து 15(1) என்ற பிரிவின் கீழ் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு முன் இதே கோரிக்கையுடன் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் முறையீடு செய்தார். முறையீட்டை மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி கிருபாகரன் அமர்வு தெரிவித்தது.

இந்நிலையில் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி கோரி மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி அரசு தலைமை வழக்கறிஞரிடம் ஜனவரி 18-ம் தேதி மனு கொடுத்திருந்தார்.

இந்த மனுவைப் பரிசீலித்த அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் இதில் விசாரணைக்கு ஆஜராகும்படி ஆடிட்டர் குருமூர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன்படி பிப்ரவரி 16-ல் குருமூர்த்தி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

வணிகம்

39 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்