தேசிய வாக்காளர் தினம்; தேர்தல் தொடர்பான வினாடி வினா- பரிசு: சத்யபிரதா சாஹு தகவல்

By செய்திப்பிரிவு

11-வது தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தேர்தல் தொடர்பான குறுஞ்செய்தி வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“11-வது தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தேர்தல் தொடர்பான குறுஞ்செய்தி வினாடி வினா போட்டியினை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டி பெருமளவு மக்களைச் சென்றடையும் வகையில் அனைத்திந்திய வானொலி நிலையம், சென்னை, ரேடியோ மிர்ச்சி மற்றும் பொதிகை தொலைக்காட்சி மூலமாகவும் நடத்தப்படும்.

குறுஞ்செய்தி வினாடி வினா போட்டிக்கான வினாக்கள் கேட்கப்படும் கால அட்டவணை:

ஊடகத்தின் பெயர், போட்டி நடைபெறும் நாட்கள், கேள்வி கேட்கப்படும் நேரம் விவரம்:

* ஆல் இந்திய ரேடியோ, சென்னை. ஜன.15 முதல் ஜன.19 வரை (5 நாட்கள்) காலை 10 மணி முதல் 10.30 மணி வரை. மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை நடக்கிறது.

* பொதிகை தொலைக்காட்சி, சென்னை, மாலை 7.30 மணி மற்றும் மாலை 8.30 மணி.

* ரேடியோ மிர்ச்சி மேற்கூறிய கால நேரம் தவிர்த்து பிற நேரங்களில்...

இப்போட்டியில் பங்கேற்கும் ஆர்வமுள்ளவர்கள் 73050 60456 என்ற எண்ணிற்கு, பதில்களைக் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி பங்கேற்கலாம். மேற்கூறிய எண்ணிற்குச் சரியான பதிலை முதலாவதாக குறுஞ்செய்தி அனுப்பும் நபருக்கு அடுத்தடுத்த நாட்களில் தொடர்பு கொள்ளப்பட்டு பரிசு வழங்கப்படும்.

மேற்கூறியவாறு குறிப்பிட்ட கால அட்டவணைப்படி தனித்தனியாக ஒவ்வொரு ஊடகத்திலும் மொத்தம் 10 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் ஒளி/ ஒலிபரப்பு செய்யப்பட்டு 10 நிமிடங்களுக்குள் உரிய விடையைக் குறுஞ்செய்தி மூலம் அனுப்பும் நபர்கள் மட்டுமே போட்டியாளர்களாகக் கருதப்படுவர்.

ஒவ்வொரு ஊடகத்திலும் கேட்கப்பட்ட 10 வினாக்களில் அதிக பதில்களைக் குறுஞ்செய்தி மூலம் அனுப்பிய நபர்களுக்கு பரிசுகள் மாநில அளவிலான தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தின்போது வழங்கப்படும்.

இரண்டு நபர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் சரியான பதிலை அனுப்பும்பட்சத்தில் வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். வெற்றி பெற்றவர்களுக்கு ஜன.25 அன்று நடைபெறும் மாநில அளவிலான தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தின்போது முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் முறையே ரூ.10,000, ரூ.7,000, ரூ.5,000 வழங்கப்படும்”.

இவ்வாறு சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்