தொழில், கல்விக்கடன் பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சிறுபான்மையினருக்கான தொழில், கல்விக்கடன் பெற நவம்பர் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகளில், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வாயிலாக கடன் வழங்கப்படுகிறது.

நகர்ப்புறத்தில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். சென்னை மாவட்ட மகளிர் மேம்பாட்டு திட்டத்தில் பதிவு செய்த சுய உதவிக் குழுக்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது.

மேலும், சிறுபான்மையினர் புதிதாக தொழில் தொடங்குவதற்கும், ஏற்கெனவே செய்துவரும் தொழில்களை அபிவிருத்தி செய்வதற்கும், குழுவுக்கு ரூ.20 லட்சம் வரையும், தனிநபருக்கு அதிகபட்சம் ரூ.1 லட்சமும் 7 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.

சிறுபான்மையின மாணவர்கள் அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி பயில அதிகபட்சம் ரூ.15 லட்சம், முதுகலை தொழிற்கல்விக்கு ரூ.9 லட்சம், வெளிநாடுகளில் பயில அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரையும் ஆண்டுக்கு 3 சதவீத வட்டியில் கல்விக்கடன் வழங்கப்படுகிறது.

இக்கடனுக்கான விண்ணப் பங்களை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கிகளில் கட்டணமின்றி பெற்றுக் கொள்ள லாம். விண்ணப்பங்களை நவம்பர் 11-ம் தேதிக்குள் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 mins ago

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

சினிமா

12 hours ago

மேலும்