செம்மரம் கடத்தல்: இளவரசி உறவினர் பாஸ்கரன் கைது

By செய்திப்பிரிவு

செம்மரக்கட்டைகள் கடத்தல் வழக்கில் இளவரசியின் உறவி னர் பாஸ்கரனை ஆந்திர மாநில போலீஸார் கைது செய்து உள்ளனர்.

சசிகலாவின் உறவினரான இளவரசியின் மகன் விவேக். ஜெயா தொலைக்காட்சியின் நிர் வாக இயக்குநராக இருக்கிறார். இவரது மாமனார் பாஸ்கரன் (55). சென்னை அண்ணா நகர் மேற்கில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் மீது ஏராளமான வழக்கு கள் உள்ளன. குறிப்பாக செம் மரங்களை வெட்டி வெளிநாடு களுக்கு கடத்துவதாக ஆந்திர மாநில போலீஸார் இவர் மீது பல வழக்குகள் பதிவு செய்துள்ளனர். செம்மரக் கட்டைகளை கடத்தி வந்ததாக தமிழக போலீஸாரும் இவர் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதேபோல் வருவாய் புலனாய்வு பிரிவினரும் பாஸ்கரன் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு செம்மரக் கட்டைகள் கடத்தியது தொடர் பாக 2 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்காக பாஸ்கரனை கைது செய்ய ஆந்திர அதிரடிப் படை போலீஸார் முடிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து 2 கார்களில் சென்னை வந்த போலீஸார், அண்ணா நகரில் உள்ள பாஸ்கரனின் வீட்டுக்கு நேற்று அதிகாலையில் சென்ற னர். அவரை கைது செய்வதற் கான வாரண்ட்டை காட்டி, பின்னர் பாஸ்கரனை கைது செய்தனர்.

கைதான பாஸ்கரனை அழைத் துக் கொண்டு ஆந்திர போலீஸ் சென்னை அண்ணா நகர் காவல் நிலையம் சென்று, கைது விவரத்தை தெரிவித்து விட்டு சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 mins ago

ஜோதிடம்

32 mins ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

மேலும்