ஜன.14-ம் தேதி அமித் ஷா சென்னை வருகை: நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசவும் திட்டம்

By செய்திப்பிரிவு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 14-ம் தேதி சென்னை வருகிறார். அப்போது நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக அரசு விழாவில் பங்கேற் பதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா, கடந்த நவம்பர் 21-ம் தேதி சென்னை வந்தார். அவரை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர். கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில் அமித் ஷா முன்னிலையில் பேசிய முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர், ‘அதிமுக, பாஜக கூட்டணி தொடரும்" என்று அறிவித்தனர். ஆனால், கூட்டணி தொடர்பாக அமித் ஷா எதுவும் பேசவில்லை.

அதேநாளில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களுடன் கட்சி வளர்ச்சி, பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து அமித் ஷா
ஆலோசனை நடத்தினார். 'துக்ளக்' ஆசிரியர் எஸ்.குருமூர்த்தியும் அமித் ஷாவை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், 'துக்ளக்' வார இதழின் 51-வது ஆண்டு விழா, வரும் 14-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக அமித் ஷா சென்னை வருகிறார்.

அப்போது, தேர்தல் கூட்டணி குறித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகி யோருடன் அமித் ஷா பேச்சு நடத்த
இருப்பதாகவும் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக வும் கூறப்படுகிறது. அத்துடன் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரிக்கவும் அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தால் அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று கடந்த டிசம் பர் 29-ம் தேதி ரஜினி அறிவித்
தார். இதுகுறித்து கருத்து தெரிவித் திருந்த எஸ்.குருமூர்த்தி, ‘அரசியல் கட்சி தொடங்காவிட்டாலும் 1996 போல ஏதாவது கட்சி அல்லது கூட்டணிக்கு ரஜினி ஆதரவு குரல் கொடுப்பார்’ என்று கூறியிருந்தார். இந்தச் சூழலில் ரஜினியை சந்திக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப் படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

தமிழகம்

53 mins ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

மேலும்