மின்கட்டணம் செலுத்தாமல் உள்ள 8 லட்சம் இணைப்புகளை துண்டிக்க உத்தரவு- தமிழக மின்வாரியம் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் மின்கட்டணம் செலுத்தாமல் உள்ள 7.84 லட்சம் மின் இணைப்புகளை துண்டிக்குமாறு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள மின்இணைப்புகள் பல மின்கட்டணம் செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறுமின்கட்டணம் செலுத்தாத மின் இணைப்புகளுக்கு உடனடியாக மின்இணைப்பை துண்டிக்குமாறு மேற்பார்வை பொறியாளர்களுக்கு பலமுறை கடிதங்கள் மற்றும் குறிப்பாணைகள் மூலம் தெரிவித்தும் அவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

கடந்த மாதம் வரையிலான அறிக்கையின்படி, அரசு மின் இணைப்புகள் நீங்கலாக 7 லட்சத்துத்து 84 ஆயிரத்து 721 மின்இணைப்புகள் கட்டணம் செலுத்தாமல் உள்ளன. ஆனால், இந்த மின்இணைப்புகள் இதுவரைதுண்டிப்பு செய்யப்படவில்லை. இதனால், மின்வாரியத்துக்கு ரூ.199.81 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, மின்கட்டணம் செலுத்தாத மின்இணைப்புகளை உடனடியாகத் துண்டிக்குமாறு மேற்பார்வை பொறியாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்