வாக்காளர் பட்டியலில் இருந்து 6,000 தேமுதிகவினர் பெயர்கள் நீக்கம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்

By செய்திப்பிரிவு

விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிகவைச் சேர்ந்த 6 ஆயிரம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட் டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அக்கட்சி யின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.எம்.காமராஜ் புகார் மனு அளித்துள்ளார்.

சென்னை எழும்பூர் தொகுதி தேமுதிக எம்எல்ஏ நல்லதம்பி, மேற்கு மாவட்டச் செயலாளர் ஏ.எம்.காமராஜ் ஆகியோர் நேற்று காலை தலைமைச் செயலகத்துக்கு வந்தனர். அங்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்ப தாவது: தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக தேமுதிக சார்பில் ஆலந்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்டேன். விருகம்பாக்கம் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக வும் உள்ளேன். அப்படி இருக்கும் போது விருகம்பாக்கம் தொகுதி வாக்காளர் பட்டியலில் என் பெயர் நீக்கப்பட்டுள்ளது. என் மனைவியின் பெயர் உள்ளது. இந்த தொகுதியில் எங்கள் கட்சியைச் சேர்ந்த 6 ஆயிரம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. உடனடி யாக இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் நிருபர்களிடம் காமராஜ் கூறும்போது, ‘‘கடந்த 20-ம் தேதி நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமின்போது பட்டியலில் என் பெயர் இருந்தது. தற்போது பெயர் இல்லை’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

58 mins ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்