புரெவி புயலால் ராமேசுவரம் அருகே குருசடை தீவு சேதம்

By செய்திப்பிரிவு

புரெவி புயலால் ராமேசுவரம் அருகே யுள்ள குருசடைத் தீவு சேதமடைந்தது. ‘நிவர்’ புயலைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவாகிய புரெவி புயல் கடந்த புதன்கிழமை இரவு இலங்கை திரிகோணமலை பகுதியைத் தாக்கியது. தொடர்ந்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு நகர்ந்தது. பின்னர் பாம்பன்- கன்னியாகுமரி இடையே கரையைக் கடந்து அரபிக் கடலுக்குச் செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சற்று திசை மாறி வடமேற்கே பயணித்து வியாழக்கிழமை பாம்பன் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டது.

தொடர்ந்து நேற்று காலை மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக ராமநாதபுரம் அருகே 40 கி.மீ. தூரத்தில் ஒரே இடத்தில் 30 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்து வருவதாகவும், பாம்பன் வழியாக தென்மேற்கு திசையில் நகர்ந்து கேரள பகுதியை நோக்கி நகரும் என வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், 4-வது நாளாக ராமேசு வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் கடற்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழை மற்றும் சுழன்றடித்த சூறாவளியால் ராமேசுவரம் அருகே உள்ள குரு சடை தீவில் உள்ள கட்டிடங்கள், சுற்றுலாப் படகு மற்றும் மீனவர்களின் படகுகள் சேதமடைந்தன. இவற்றை அப்புறப்படுத்தும் பணியில் வனத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம்: (மி.மீ.-ல்) ராமேசுவரம்- 111, மண்டபம்-78, தங்கச்சிமடம்- 72, பாம்பன் - 64, பரமக்குடி- 39, வாலி நோக்கம் - 26.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வேலை வாய்ப்பு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்