மக்களை சந்திக்காமல் தேர்தலை எதிர்கொள்ள முடியாது; அரசியலில் நுழைவது சரியாகப் படவில்லை: ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களிடம் ரஜினிகாந்த் திட்டவட்டம்

By மகராசன் மோகன்

மக்களை சந்திக்காமல் தேர்தலை சந்திக்க விருப்பமில்லை என்றும் தற்போதைய சூழலில் அரசியலில் நுழைவது சரியாகப் பட வில்லை என்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்ட மாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு டிச.31-ல் அரசிய லுக்கு வருவதாக அறிவித்த நடிகர் ரஜினி காந்த், புதிய கட்சி தொடங்கி 234 தொகுதி களிலும் தனித்துப் போட்டியிடுவோம் என் றார். இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால், ரஜினி கட்சி தொடங்குவது தாமதமாகி வந்தது.

இதற்கிடையே, ரஜினியின் உடல் நிலையை குறிப்பிட்டு, அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதுபற்றி விளக்கம் அளித்த ரஜினி, ‘அது எனது அறிக்கை இல்லை. ஆனால், எனது உடல்நிலை குறித்து அதில் கூறியிருப்பது உண்மைதான். எனது அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு தெரிவிப்பேன்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை ரஜினி நேற்று காலை சந்தித்தார். இதில் தமிழகம், புதுச் சேரியைச் சேர்ந்த 37 மாவட்டச் செயலாளர் கள் கலந்துகொண்டனர். அவர்களிடம் ரஜினி பேசியதாவது:

கடந்த 2016-ம் ஆண்டு எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர்கள் ஆலோசனையின்பேரில் தின மும் 16 மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண் டிருக்கிறேன். இன்றைய கரோனா சூழலில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அளவுக்கு என் உடல்நிலை இல்லை. மக்களை நேரடி யாக சந்திக்காமல் அரசியலில் ஈடுபடுவது சரியாக இருக்காது. மற்ற அரசியல் கட்சிகளோடு சேர்ந்து 15, 20 சீட் வாங்கிக் கொண்டு கூட்டணி அரசியல் என்று இறங்குவதிலும் எனக்கு விருப்பம் இல்லை.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, 2017-ம் ஆண்டு டிசம்பரில், ‘அரசிய லுக்கு வருகிறேன்’ என்று சொன்னவன் நான். அப்போது இருந்த அரசியல் வெற் றிடம் என்னை முழுமூச்சாக இறங்கி வேலை பார்க்கத் தூண்டியது. அதற்கான வேலைகளில் இறங்கலாம் என இருந்தபோது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் முற்றிலும் சூழலை மாற்றிவிட்டது.

தேர்தலை எதிர்கொள்ளும் முன்பு நாகூர் தர்காவுக்கும், வேளாங்கண்ணி தேவாலயத் துக்கும், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக் கும் சென்று வழிபட்டுவிட்டு தொடங்க வேண்டும் என திட்டமிட்டு வைத்திருந்தேன். இன்றோ, எல்லாமும் எதிர்பாராத திருப்ப மாக அமைந்தது. ‘இந்தச் சூழலில் இவர் வெளியே எங்கும் செல்லக் கூடாது’ என்று என் குடும்ப உறுப்பினர்களிடம் மருத்துவர் கள் அறிவுரை கூறுகின்றனர். என் உயிரைப் பற்றி எனக்கு கவலை இல்லை. உங்களை எல்லாம் களத்தில் இறக்கிவிட்டு, அதன் பிறகு எனக்கு ஏதாவது என்றால் நீங்கள் எல்லோரும் நட்டாற்றில் நிற்பீர்களே, அதுதான் என் கவலையாக உள்ளது.

ரஜினி மக்கள் மன்றத்தில் முஸ்லிம், தலித் உள்ளிட்ட பல சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். அப்படி இருக்கும்போது பாஜக போன்ற கட்சிகளோடு நான் எப்படி கூட்டணி வைக்க முடியும், அதற்கு வாய்ப்பே இல்லை. நம் முதுகின் மீது அடுத்தவர்கள் சவாரி செய்வதை நான் எப்போதும் விரும் புவன் அல்ல. கரோனா முற்றிலும் ஒழிந் தால் அதன்பிறகு பார்க்கலாம். அதுவரைக் கும் அரசியலில் தீவிரம் செலுத்தப் போவதில்லை. ரஜினி மக்கள் மன்றம் எப்போதும்போல இயங்கும். அதன்மூலம் நற்பணிகள் அனைத்தும் தொடரும்.

இனி சினிமாவிலும் அதிக கவனம் செலுத்த வேண்டாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால்தான் இன்னும் படப்பிடிப்புக்கு கிளம்பாமல் உள்ளேன்.

எம்ஜிஆர் படுத்துக்கொண்டே ஜெயித் தார் என்றால் அது அன்றைக்கு திமுக செய்த தவறான பிரச்சாரம். அவர்கள், எம்ஜிஆர் இறந்துவிட்டதாக கூறி பரப் பினார்கள். ஆனால், அதிமுகவினரோ எம்ஜிஆரின் வீடியோவை வெளியிட்டு ஓட்டு கேட்டனர். அது அதிமுகவுக்கு பெரும் பலமாக அமைந்தது.

‘அரசியலுக்கு வருகிறேன்.. வருகிறேன் என்று கூறிய ரஜினி, கடைசியில் வரவில் லையே’ என்று பலரும் கிண்டல் செய்யலாம். அதை யாரும் ஈகோவாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எந்த விமர்சனத்தையும் பெரி தாக பொருட்படுத்த வேண்டாம். நான் எப் போதுமே வெளிப்படையாக, எதார்த்தமாக, நேர்மையாக, உண்மையாக, நடுத்தரமாக இருக்கிறேன். இனி வரும் காலங்களிலும் அப்படியே இருப்பேன்.

எல்லாம் கடவுள் செயல்

நடிக்க வரும் முன்பு, திரைப்பட கல் லூரிக்கு சரியாக போக முடியவில்லை என கருதி, ஒரு ஆண்டுடன் நின்றுவிட நினைத் தேன். உடன் இருந்த நண்பன் ஒருவன், ‘கல்லூரியை இடையில் நிறுத்தக் கூடாது’ என என்னை தடுத்தான். அதனால்தான் அடுத்த சில மாதங்கள் தொடர்ந்தேன். அந்த நேரத்தில்தான் இயக்குநர் பாலச்சந்தர் கண்களில் பட்டேன். அப்படித்தான் சினிமா வுக்கு வந்தேன். இன்றைக்கு உங்கள் அன் பும் எனக்கு கிடைத்தது. இப்படி என்னைச் சுற்றி நடக்கும் எல்லாமும் கடவுளால் நடப்பதாகவே கருதுகிறேன். இன்றைய அரசியல் சூழலிலும் இப்படி நடக்க வேண்டும் என கடவுள் நினைப்பதாகவே எடுத்துக் கொள்கிறேன்.

ஆகவே, எதிலும் நிதானமாக யோசித்து இறங்குங்கள். இப்போதைய சூழலில் அரசியல் நுழைவு என்பது சரியான முடிவாகப் படவில்லை. அதனால்தான் உங்கள் அனைவரையும் அழைத்து பேசுவோம் என வரவழைத்தேன். இதையே ஊடகம் வழியே மக்களிடமும் தெரிவித்து விடுகிறேன்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

ரஜினியின் முடிவை தெரிந்து கொள் வதற்காக ஆலோசனை கூட்டம் நடந்த ராகவேந்திரா மண்டபம் முன்பு ஏராளமான ரசிகர்கள் ஆவலுடன் திரண்டிருந்தனர். பலர், ‘ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம்’, ‘இப்போ இல்லைன்னா எப்போதும் இல்லை’, ‘எங்கள் ஓட்டு உனக்குத்தான் தலைவா’ என்பன போன்ற வாசகங்களுடன் கூடிய சட்டை, டி-சர்ட் அணிந்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்