‘வாசன் ஐ கேர்’ நிறுவனர் அருண் காலமானார்

By செய்திப்பிரிவு

வாசன் ஐ கேர் நிறுவனர் அருண் (வயது 52) நேற்று மாரடைப்பால் காலமானார்.

‘வாசன் ஐ கேர்’ நிறுவனர் ஏ.எம்.அருண், திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு கண் மருத்துவமனைகள், பல் மருத்துவமனைகளை தொடங்கினார். இந்தியாமுழுவதும் 170-க்கும் மேற்பட்ட இடங்களில் இவை செயல்படுகின்றன. 10 ஆண்டுகளில் வாசன் ஐ கேர் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியது.

சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள வீட்டில் இருந்த அருணுக்கு நேற்று காலை 8 மணி அளவில் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைபரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர்உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அருண் மாரடைப்பால் இறந்தது அவரது குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காங்கிரஸ் பாரம்பரியத்தை கொண்டவர் அருண். இவரது தந்தை ஏ.ஆர்.முருகையா கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்