பணியிலுள்ள ராணுவ வீரர்கள் வாரிசுகளுக்கு மருத்துவ சேர்க்கையில் தனி ஒதுக்கீடு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

By கி.மகாராஜன்

பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் தனி ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு தனி ஒதுக்கீடு உள்ளது. இதேபோல் பணியிலுள்ள ராணுவவீரர்களின் வாரிசுகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கேட்டு இளையான்குடியைச் சேர்ந்த குறளரசன் உட்பட பலர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் ஒதுக்கீடு வழங்க மறுத்து தமிழக அரசு 2018-ல் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து, பணியிலுள்ள முப்படை வீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் தனி ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டார்.

இதை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பி்ன்னர் நீதிபதிகள், இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ளன. ஆண்டுதோறும் மருத்து இடங்கள் அதிகரிக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு இடங்கள் அதிகரிக்கப்படுகிறதா? தமிழகத்தில் 2015 முதல் 2020 வரை மருத்துவ மாணவர் சேர்க்கையில் ராணுவ வீரர்களுக்கான இடங்கள் எத்தனை அதிகரிக்கப்பட்டது? அதில் முன்னாள் இராணுவ வீரர்களின் வாரிசுகள் எத்தனை பேர் விண்ணப்பித்தினர்? அவர்களுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்யபட்டஜ? என்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

பின்னர் விசாரணையை நவ. 20-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

வணிகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

4 hours ago

மேலும்