ஜன.1 முதல் சனிக்கிழமை பணி ரத்து; அரசு ஊழியர் பணி 5 நாளாக குறைப்பு: 100% அலுவலர்களுடன் இயங்க உத்தரவு

By செய்திப்பிரிவு

2021-ம் ஆண்டு ஜன.1-ம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு சனிக்கிழமை பணிநாள் ரத்து செய்யப்படுவதுடன் அனைத்து அரசு அலுவலகங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச்24-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தற்போது 9-ம் கட்டமாகஅக்.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது அத்தியாவசிய பணிக்கான அரசு ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அனுமதிக்கப்பட்டு, அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன.

அதன்பின் கடந்த மே 15-ம் தேதி,50 சதவீதம் பணியாளர்கள் 2 பிரிவாகப் பிரிக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் சனிக்கிழமையும் சேர்த்து வாரத்துக்கு ஆறு நாட்கள் பணிசெய்யவும் அரசு உத்தரவிட்டது.

தொடர்ந்து, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆக.31-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில், செப்.1 முதல்100 சதவீத பணியாளர்கள் பணிக்குவர அறிவுறுத்தப்பட்டனர். ஆனால், சனிக்கிழமை பணி நாள்ரத்து செய்யப்படவில்லை.

இந்நிலையில், வரும் ஜனவரி முதல் சனிக்கிழமை பணி நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளியிட்டஅரசாணையில், “அரசு அலுவலகங்களில் வரும் 2021-ம் ஆண்டுஜனவரி 1-ம் தேதி முதல், தற்போதுஅமலில் உள்ள வாரத்துக்கு 6 நாள்பணி என்பது திரும்ப பெறப்பட்டு, 5 நாள் பணி என்றும் 100 சதவீத பணியாளர்களுடன் தற்போதைய அலுவலக நேரத்தில் இயங்கலாம் என்றும் அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

58 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்