மார்க்கெட் ஆஃப் இந்தியாவின் எக்ஸ்பீரியன்ஸ் மையம் திறப்பு சென்னையின் வர்த்தகப் புரட்சிக்கான தொலைநோக்கு திட்டம் வெளியீடு

By செய்திப்பிரிவு

மார்க்கெட் ஆஃப் இந்தியா என்ற மாபெரும் செயல்திட்டத்தின் எக்ஸ்பீரியன்ஸ் மையம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கிய எஸ்பிஆர் குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தின் 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மார்க்கெட் ஆஃப் இந்தியா செயல்திட்டம் இடம்பெற்றிருந்தது. அதன்படி சென்னையில் 30 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட தி எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்த விற்பனை கடைகள் மின்ட் தெரு, ஜார்ஜ் டவுன் போன்ற பிரிட்டிஷ் கால நெருக்கடி மிக்க, சிறிய தெருக்களிலிருந்து முற்றிலும் மாறுதலாக புதிய இடத்தில் செயல்படுவதன் மூலம் அதிவேகமாக மாற்றம் கண்டுவரும் நவீன உலகலாவிய வர்த்தகத்துக்கு வழிவகுக்கும்.

சென்னை மாநகரை உலகின் வர்த்தக தலைநகராக ஆக்குவதை குறிக்கோளாகக் கொண்டு இங்கு பல்வேறு நிலைகளில் 5 ஆயிரம் கடைகள் கட்டப்படுகின்றன.

தொடக்க விழாவில் எஸ்பிஆர் குழும மேலாண்மை இயக்குநர் ஹித்தேஷ் கவாத் கூறும்போது, “வர்த்தக கட்டமைப்பு வசதி இல்லாததால் சிறிய வர்த்தகரால் தனது திறனையும், பலத்தையும் சரியாக பயன்படுத்தி பயனடைய இயலவில்லை. ஆனால், மார்க்கெட் ஆஃப் இந்தியா சிறிய வர்த்தகர்கள் வளர்வதற்கான உகந்த சூழலை ஏற்படுத்தும்” என்றார்.

எஸ்பிஆர் குழுமத்தின் இயக்குநரான நவீன் ரங்கா கூறும்போது, “வரலாற்று ரீதியாகவே, இந்தியாவின் சில்லறை மொத்த வியாபாரத்தின் தலைநகராக சென்னைவிளங்கிவருகிறது. 2 நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியாவின் ஜவுளி வர்த்தகத்தின் தோற்றுவாயாக இருந்த பக்கிங்ஹாம் அண்டு கர்நாட்டிக் மில்ஸ் அமைவிடத்தில் மார்க்கெட் ஆஃப் இந்தியாவின் செயல்திட்டம் உருவாகி வருவதில் வியப்பில்லை” என்றார்.

மற்றொரு இயக்குநரான சேட்டன் போரா பேசும்போது, “சென்னை மாநகரம் இந்தியா மட்டுமின்றி, உலகுக்கே வர்த்தக தலைநகரமாக உருவாகக்கூடிய நிலையை நிச்சயமாக எட்ட முடியும்” என்றார். போத்தீஸ் மேலாண் இயக்குநர் எஸ்.ரமேஷ், குமரன் சில்க்ஸ் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குநர் பி.ஆர்.கேசவன், வசந்த் அண்டு கோ பங்குதாரர் விஜய் வசந்த், விவேக்ஸ் நிறுவன துணைத் தலைவர் விஷால், கிரண்ட்ஃபோஸ் பம்ப்ஸ் இந்தியா தூதர் என்.கே.ரங்கநாத், ரத்னா ஸ்டோர்ஸ் இணை நிர்வாக இயக்குநர் ரத்னகுமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்