கரோனாவால் வாழ்வாதாரம் முடக்கம்; உதவி கேட்ட பலூன் வியாபாரிக்கு இருசக்கர வாகனம் கொடுத்து உதவிய ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பலூன் வியாபாரி, கரோனாவால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் உதவி கேட்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதினார். அவருக்கு இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுத்து ஸ்டாலின் உதவியுள்ளார்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. மாற்றுத்திறனாளியான இவர் திருவிழாவில் பலூன் விற்பனை செய்பவர். கரோனா காலத்தில் அவரது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் யாரிடம் உதவி கேட்பது எனத் தெரியாமல் தவித்த அவர், திமுக தலைவர் ஸ்டாலினுக்குக் கடிதம் மூலம் தனது நிலையைத் தெரிவித்து உதவி கேட்டார்.

அதில், தனக்கு ஒரு வாகனம் கிடைத்தால் அதன் மூலம் பல இடங்களுக்குச் சென்று பலூன்களை விற்று தனது வாழ்க்கையைத் தள்ள முடியும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

கடிதத்தைப் படித்த ஸ்டாலின், தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணனிடம் பலூன் வியாபாரி சுப்பையாவிற்கு புதிய இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கிக் கொடுக்கும்படி கூறினார்.

அதன்படி புதிய டிவிஎஸ் எக்ஸல் இருசக்கர வாகனத்தை வாங்கிய கம்பம் ராமகிருஷ்ணன், சுப்பையாவை அழைத்து அவரிடம் வழங்கினார். தனது நிலை அறிந்து உதவிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், கம்பம் ராமகிருஷ்ணனுக்கும் பலூன் வியாபாரி சுப்பையா நன்றி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 mins ago

தமிழகம்

53 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்