மூன்று நாட்கள் தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

By செய்திப்பிரிவு

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை யால் கொடைக் கானலுக்கு நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இதனால் மலைச் சாலையில் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடந்த ஐந்து மாதங்களாக கரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் கொடைக் கானல் செல்ல அரசு தடை விதித்திருந்தது. ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு கொடைக் கானல் செல்ல இ-பாஸ் அவசியம் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதையடுத்து காந்தி ஜெயந்தி மற்றும் வார விடுமுறை என மொத்தம் 3 நாட்கள் தொடர் விடுமுறையால் ஏராளமானோர் நேற்று கொடைக்கானல் வந்தனர்.

கொடைக்கானல் நுழை வாயிலான வெள்ளி நீர்வீழ்ச்சி டோல்கேட் பகுதியில் வாகனங் களுக்கு இ-பாஸ் உள்ளதா என சோதனை செய்தும், டோல்கேட் கட்டணம் பெற்றும் அனுப்ப தாமதமாகியது. இப்பணியில் குறைந்த எண்ணிக்கையிலான அலுவலர்கள் ஈடுபட்டிருந்ததால் வாகனங்களை உடனுக்குடன் அனுப்ப முடியவில்லை.

இதனால் நேற்று காலை முதல் வெள்ளி நீர் வீழ்ச்சி அருகே சில கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. சுற்றுலாப் பயணிகள் வருகை திடீர் என அதிகரித்ததால் கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுற்றுலாத் தலங்கள் பெரும்பாலானவற்றை திறக்காத நிலையில், திறக்கப்பட்ட பிரை யண்ட் பூங்கா, ரோஸ் கார்டன், கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாகக் காணப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

உலகம்

6 hours ago

ஆன்மிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்