திமுக வாக்காளர்களை நீக்க சதி: தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஜெ.அன்பழகன் புகார்

By செய்திப்பிரிவு

திமுகவைச் சேர்ந்த வாக்காளர் களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க சதி நடப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் ஜெ.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:

எனது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தேர்தல் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வரும் ஆசிரியை உமா, 116-வது வார்டு 106-வது பூத்தின் கீழ் வசிக்கும் வாக்காளர்கள் நூர் முகம்மது, கரிமுநிசா, ரபி முகம்மது, ரஹமத்பி, கவுசல்யா, மெஹபூநிசா ஆகிய 6 பேரிடம் வாக்காளர் நீக்கத்துக்கான படிவம் 7 ஐ கொடுத்து கையொப்பமிடச் சொல்லியுள்ளார்.

மேலதிகாரிகளின் உத்தரவுப்படி..

அதில் கையெழுத்து போட மறுத்த அவர்கள், ‘ஏன் எங் களை அந்த படிவத்தில் கையெழுத்து போட சொல்கிறீர்கள்’ என்று ஆசிரியை உமாவிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த உமா, ‘எனக்கு எதுவும் தெரியாது. எல்லாம் மேல் அதிகாரிகளின் உத்தரவு’ என்று கூறியுள்ளார். மேற்சொன்ன வாக்காளர்கள் 6 பேருமே திமுகவைச் சேர்ந்தவர்கள்.

இதுபற்றி என்னிடம் அவர்கள் அளித்த தகவலின்படி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் புகார் அளித்தேன். ஆசிரியை உமாவை தலைமை தேர்தல் அதிகாரியே தொடர்பு கொண்டு பேசினார். அப்போதும், மேலதிகாரிகளின் உத்தரவின் பேரிலேயே தான் அப்படி செய்ததாக ஆசிரியை உமா கூறினார்.

எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி உறுதி அளித்தார். திமுக வாக்காளர்களை நீக்கும் முயற்சியில் சென்னை மாநகராட்சி திட்டமிட்டு ஈடுபடுகிறது. இதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அன்பழகன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

சினிமா

50 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

14 hours ago

மேலும்