கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் பகுதியில் விவசாய நிலத்தில் இறந்து கிடந்த 28 மயில்கள்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் பகுதியில்மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

வனச்சரகர் சிவராம், வனவர் நாகராஜன் மற்றும் வனக்காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்குள்ள விவசாய நிலத்தில் ஆங்காங்கே மொத்தம் 28 மயில்கள் இறந்துகிடந்தன. பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு மயில்களின் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

பிள்ளையார்நத்தத்தில் உள்ள மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் விதை ஊன்றும் பணி முடிந்துள்ளது. சில இடங்களில் சுமார் அரை அடி வரை பயிர்கள் வளர்ந்துள்ளன. இதில் பூச்சிகள் தாக்காமல் இருக்க விவசாயிகள் மருந்து தெளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை மயில்கள் உட்கொண்டு இறந்தனவா?, அல்லது பயிர்களை சேதப்படுத்துவதாக மயில்களுக்கு யாரும் விஷம் வைத்து கொன்றார்களா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

வலைஞர் பக்கம்

5 mins ago

சினிமா

10 mins ago

சினிமா

15 mins ago

இந்தியா

23 mins ago

க்ரைம்

20 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்