வருவாய்த் துறை, பேரூராட்சிகளின் அலட்சியத்தால் ஸ்ரீபெரும்புதூரில் சிதைந்துபோன பாசனக் கால்வாய்கள்: பொதுப்பணித் துறையினர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

ஸ்ரீபெரும்புதூரில் விவசாய கால்வாய் பராமரிப்பின்றி சிதைந்து போவதற்கு வருவாய்த் துறையும் பேரூராட்சி நிர்வாகமும் ஒத்துழைக்காததுதான் காரணம் என பொதுப்பணித் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் விவசாயிகள் கூறும்போது, ‘காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் இருந்துவிவசாய நிலங்களுக்கு தண்ணீர்செல்லும் கால்வாய், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட டி.கே. நாயுடு நகர், மகாத்மா காந்திநகர், பாரதி நகர் குடியிருப்புகளின் வழியாகச் செல்கிறது.

பெங்களுரூ நெடுஞ்சாலையைக் கடந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் இக்கால்வாய் அதிக அளவில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருப்பதை வருவாய்த் துறை, பேரூராட்சி மற்றும் பொதுப்பணி துறையினர் கண்டுகொள்வதே இல்லை.

ஆக்கிரமிப்புகளால் 15 அடி அகலமாக இருந்த கால்வாய் 3 அடியாக சுருங்கி, கழிவுநீர் கால்வாயாகிவிட்டது. இதனால், மழைக்காலத்தில் மழைநீர் செல்ல வழியின்றி பாரதி நகரில் வெள்ளநீர் தேங்குகிறது என பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை’ என்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் மார்கண்டேயன் கூறியதாவது: பாசன கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற, கால்வாயை அளவீடு செய்து கொடுக்கும்படி வருவாய்த் துறையினரிடம் எங்கள் பொதுப்பணித் துறையினர் பலமுறை கேட்டும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை.

அதேபோல் பேரூராட்சி நிர்வாகத்திடமும் அந்தக் கால்வாயில்கழிவுநீரை விடுவதை தடுக்கும்படி வலியுறுத்தினோம். அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கால்வாயை பராமரிக்கபொதுப்பணித் துறை இப்போதும் தயாராகவே உள்ளது. வருவாய்த் துறை, பேரூராட்சி ஆகிய துறையினர் எங்களோடு ஒத்துழைப்புஅளிக்காததால் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மாவட்ட நிர்வாகம்தான் இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

6 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

4 mins ago

சினிமா

22 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

16 mins ago

சினிமா

27 mins ago

சினிமா

30 mins ago

வலைஞர் பக்கம்

34 mins ago

சினிமா

39 mins ago

சினிமா

44 mins ago

மேலும்