பழம்பொருள் புதையல் கிடைத்தால் என்ன செய்வது?

By வி.சாரதா

மண்ணுக்கு அடியில் உள்ள பழமையான பொருட்கள் பல அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவை எதிர்பாராமல் சிலருக்கு கிடைப்பதுண்டு. தொல்லியல் ஆர்வலர்கள் தாமாக முன்வந்து நடத்தும் ஆய்வுகளிலும் கிடைக்கின்றன. இவ்வாறு கிடைக்கும் பொருட்களின் உண் மைத் தன்மை குறித்து தொல் லியல் ஆராய்ச்சி நிறுவன அதி காரிகள்தான் உறுதிப்படுத்த வேண்டும்.

இது குறித்து தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற தொல்லியல் கண் காணிப்பாளர் பெ.வெங்கடேசன் கூறும்போது, “பழம்பொருள் புதையல் சட்டத்தின்படி (ட்ரெசர் ட்ரோவ் சட்டம் 1878) மண்ணுக்கு அடியில் கிடைக்கும் 10 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள எந்தவொரு தொல்லியல் பொருளைப் பற்றியும் முதலில் வட்டாட்சியர் அல்லது கிராம நிர்வாக அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு தெரியப்படுத்துவார்கள். அதன் பின் தொல்லியல் துறை அதிகாரி கள் வரவழைக்கப்பட்டு அந்த பொருளின் காலம், தன்மை குறித்து முடிவு செய்வார்கள். அதன் பிறகு அந்த பொருள் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அருகில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப் படும்.

தொன்மை பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் புகைப்படம் எடுத்தோ அல்லது நேரில் கொண்டு வந்தோ தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அந்தப் பொருள் தொலைந்தால் கூட காவல் நிலையத்தில் வழக்குத் தொடுக் கவும், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யவும் முடியும்” என்று தெரிவித்தார்.

ஊடக அடிப்படையிலான சில தகவல்களும் வரும்போது எப்படி சரிபார்ப்பது என்று கேட்டதற்கு “அனைத்து கண்டுபிடிப்புகளையும் ஓர் இடத்தில் ஒருங்கிணைக்கக் கூடிய முறை எதுவும் அரசிடம் இல்லை. ‘இந்திய தொல்லியல் மதிப்பாய்வு’ என்பது அரசு வெளி யிடும் நம்பத்தக்க ஆவணம். அகழ்வாய்வுகள் மூலம் பல கண்டு பிடிப்புகள் நடந்து கொண்டு இருக்கின்றன. அதில் ஈடுபட்டுள்ள தனிப்பட்ட நபரின் திறமையைப் பொறுத்து அதன் நம்பகத்தன்மை உள்ளது. ஊடகங்களில் வெளி வரும் செய்திகள் உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவை எங்களுக்கு ஒரு திசையை காண்பிப்பதால் அவற்றை ஊக்குவிப்பதும் இல்லை, குறை கூறுவதும் இல்லை” என்றார் பெ.வெங்கடேசன்.

தொல்லியல் ஆராய்ச்சி நிறு வனத்தின் தொல்லியல் கண்காணிப் பாளர் க.லூர்துசாமி கூறும்போது, “தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனம் (ASI) கிராமம் கிராமமாகச் சென்று ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. தொன்மைப் பொருட் கள் மீதுள்ள எழுத்துகளின் வடிவமைப்பு அல்லது வேலைப் பாடுகள் இவற்றை வைத்து அந்தப் பொருளின் காலம் நிர்ண யிக்கப்படுகிறது.

இதில் கிடைக்கும் தகவல்கள் எல்லாம் ‘இந்திய தொல்லியல் மதிப்பாய்வு’ என்ற ஆவணத்தில் பதிவிடப்படும். தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதி பெறாமல் யாரும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள முடியாது” என்றார்.

ஒரு சில மாவட்டங்களில் தொல் லியல் ஆர்வலர்கள் மற்றும் தொல்லியல் துறை முன்னாள் அதிகாரிகள் இணைந்து தொல்லி யல் சங்கங்களை அமைத்துள் ளனர். ஒரு சில கல்வி நிறுவனங்கள் தொல்லியல் மாநாடுகளை நடத்துகின்றன. இந்த மாநாடுகளில் தாம் கண்டெடுத்த பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அதன் உண்மைத் தன்மை முடிவு செய்யப்படும்.

திருப்பூரைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் ரவிக் குமார் கூறும்போது, “பூமிக்கு மேற்பரப்பில் உள்ளவற்றை ஆய்வு செய்ய எங்களுக்கு அனு மதி உள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் தொல்லியல் ஆய்வாளர்கள் குழுவின் பரிந்து ரையின் பெயரில் எங்கள் கண்டு பிடிப்புகளை ‘ஆவணம்’ என்ற நூலில் வெளியிடுகின்றனர்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்