தமிழக அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் வரை வாரத்தில் 6 நாள் வேலை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் டிசம்பர் இறுதி வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் பணிக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அத்தியாவசிய பணிகளுக்கான ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்துக்கு வர அனுமதிக்கப்பட்டனர்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐடி) உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஊழியர் கள் வீடுகளில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தப் பட்டனர்.

அதன்பின், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசு அலுவலகங் களில் 50 சதவீதம் பேர் பணியாற்ற அனுமதி அளிக்கப் பட்டது. அதன்படி, வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் 50 சதவீதம் ஊழியர்களும், மீத முள்ள 50 சதவீதம் பேர் அடுத்தடுத்த நாட்களிலும் பணிக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டது. அத்துடன், சனிக்கிழமையுடன் சேர்த்து வாரத்தில் 6 நாட்கள் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த செப்.1-ம் தேதி 4-ம் கட்ட ஊர டங்கு தளர்வுகள் அறிவிக்கப் பட்டன. அப்போது, அரசு அலு வலகங்கள் 100 சதவீத பணி யாளர்களுடன் பணியாற்ற லாம் என்று தெரிவிக்கப்பட்டது. முழு அளவில் ஊழியர்கள் பணிக்கு வருவதால் வாரத் தில் 6 நாள் பணி என்பது குறைக்கப்படும், சனிக்கிழமை பணி நாளாக இருக்காது என கருதப்பட்டது. ஆனால், சனிக்கிழமையும் பணி நாளாக அரசு அறிவித்துவிட்டது.

அதன்படி, செப்டம்பர் மாத முதல் சனிக்கிழமையான நேற்று தலைமைச் செயலகம் உட்பட அனைத்து அரசு அலு வலகங்களிலும் அரசு ஊழியர்கள் முழு அளவில் பணிக்கு வந்திருந்தனர். மேலும், வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் அரசு ஊழியர்கள் பணிக்கு வரவேண் டும் என அறிவுறுத்தப்பட் டுள்ளது.

வாரத்தில் 6 நாள் வேலை என்பது டிசம்பர் வரை நீட்டிக் கப்பட்டாலும் அதுதொடர்பாக அரசாணை எதுவும் பிறப்பிக் கப்படவில்லை. மாவட்ட அளவில் இதற்கான சுற்றறிக்கை மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ள தாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

வணிகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்