ஓசூர் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று விருது

By செய்திப்பிரிவு

நோயாளிகளுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான சிகிச்சை வழங்கி வருவதற்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று விருது வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு, புதுடெல்லியில் உள்ள என்ஏபிஎச் (“National Accreditation Board of Health) என்கிற அமைப்பு, நோயாளிகளுக்கு தரமான, பாதுகாப்பான சிகிச்சை அளிப்பதற்காக தேசிய தரச்சான்று வழங்கி உள்ளது. மாவட்டத்தில் முதல் முறையாக இவ்விருதை பெற்றதையடுத்து மாவட்ட ஆட்சியர் ராஜேஷ், அசோக்குமார் எம்பி ஆகியோர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்களை பாராட்டினர்.

இதுதொடர்பாக ஓசூர் அரசு மருத்துவமனை யில் நடந்த விழாவில் ஆட்சியர் பேசியதாவது:

ஏழை, எளிய மக்களுக்கு தனியார் மருத்துவ மனைகளில் வழங்கப்படும் சிகிச்சைக்கு இணையாக அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை வழங்குவதற்காக நவீன உயிர் காக்கும் கருவிகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. ஓசூர் அரசு மருத்துவமனையில் ரூ.1.3 கோடி மதிப்பில் 48 படுக்கை வசதியுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதிநவீன அறுவை அரங்குக்கு ரூ.18 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையம் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. எடை குறைவான மற்றும் குறைபாடுள்ள குழந்தைகள் என கடந்தாண்டில் 650 குழந்தைகள் இம்மையம் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனர். இம் மருத்துவமனையில் மாதந்தோறும் 250 முதல் 350 எண்ணிக்கையிலான பிரசவங்கள் நடைபெறுகிறது.

என்ஏபிஎச் அமைப்பானது கடந்த 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் 3 முறை இம் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு ஆகஸ்ட் 2015 முதல் ஆகஸ்ட் 2017 வரையிலான காலத்திற்கு தேசிய தரச்சான்று வழங்கியுள்ளது. இம்மாவட்டத்தில் முதல் முறையாக ஓசூர் அரசு மருத்துவமனை இச்சான்றினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்விருது தமிழகத்தில் ஓசூர், நாமக்கல், பத்மநாதபுரம், சோளிங்கர் ஆகிய 4 மருத்துவ மனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின்போது சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநர் (பொ) மருத்துவர் அசோக்குமார், துணை இயக்குநர் பிரேம் குமார், ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பொன்ராஜ், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்