உயர் நீதிமன்றம் கண்டித்தும் தொடரும் மணல் கொள்ளை

By என்.சன்னாசி

தமிழகத்தில் மணல் கொள்ளை தொடர்வதால் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து பாதிக்கப்படுவதோடு நீரின் தன்மையும் மாறி வருகிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் மணல் கொள்ளை தடையின்றி தொடர்வதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் முக்கிய ஆறுகளில் நடந்த மணல் கொள்ளையால் ஆறுகள் தங்கள் அடையாளங்களை இழந் துவிட்டன. மேலும், அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளன. மணலுக்கு மாற்றாக எம்.சான்ட்டை பயன்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், கட்டுமானத் துறைப் பொறியாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

செல்வம்தமிழகத்தின் சில இடங்களில் அரசு மணல் குவாரிகளை நடத்தி வருகிறது. இவ்வாறு நடத்தும் மணல் குவாரிகள் மூலம் தனி நபர்கள் சிலர் அதனைத் தவறாகப் பயன்படுத்தி மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். பெரும் பாலான இடங்களில் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன்தான் மணல் கொள்ளை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லோகநாதன்அதேநேரத்தில் தனியார் நிலங்களில் சிலர் சவடு மண் எடுப்பதாக உரிமம் பெற்று அங்கு குறிப்பிட்ட அளவுக்கு மேலே தோண்டி மணலை எடுத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். இதுபோன்ற செயல்களாலும் அப்பகுதி யில் நிலத்தடி நீர்மட்டம், விவசாயம் பாதிக்கப்படுகிறது.

இதற்கிடையே, உயர் நீதிமன்ற கிளை ஆளுகைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் மணல் அள்ள நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், இதனை அதிகாரிகள் உரிய முறையில் கண்காணித்து நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட உயர் அதிகாரிகளை உயர் நீதிமன்றம் பலமுறை கண்டித் துள்ளது. தமிழகத்தில் ஆறுகள், நீர்நிலைகள், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமெ ன்றால் அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணி களுக்கு ஆற்று மணல் பயன்படுத்துவதைத் தடை செய்து எம்.சாண்ட் பயன்படுத்த அரசு ஊக்குவிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் மணல் கொள்ளை தொடர்ந்து ஆறுகள் தங்கள் வழித்தடங்களில் இருந்து திசை மாறுவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

இது குறித்து மணல் லாரி உரி மையாளர் செல்வம் கூறியதாவது:

வைகை, தாமிரபரணி, காவிரி உட்பட முக்கிய ஆறுகளை யொட்டிய கிராமங்களில் தனி நபர்கள் லாரிகள் மூலம் இரவு நேரங்களில் மணல் கொள்ளையில் ஈடுபடு கின் றனர். மேலும், அரசியல் வாதிகள், செங்கல் சூளை உரிமையாளர்கள் தனியார் நிலங்களில் சவடு மண் எடுக்க அனுமதிபெற்று மணல் கொள் ளையில் ஈடுபட்டுள்ளனர். அரசு அதிகாரிகள் நினைத் தால் மட்டுமே முற்றிலும் மணல் கொள்ளையைத் தடுக்க முடியும் என்றார்.

மதுரை மீனாட்சி மணல் லாரி உரிமையாளர் நலச்சங்கப் பொதுச் செயலர் ஏஜி.லோக நாதன் கூறுகையில், "அரசியல் தலையீட்டால் அதிகாரிகள் சிலர் மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கின்றனர். கிராம நிர்வாக அதிகாரி, கிராம உதவியாளருக்குத் தெரி யாமல் மணல் கொள்ளை நடக்காது. அதிகாரிகள் மட்டத்தில் சரியாக இருந்தால் மணல் கொள்ளையைத் தடுக்கலாம். மணலுக்கான மாற்று எம்-சாண்ட் வந்தாலும், மக்களுக்கு தரமானதாகக் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கூறியதாவது:

மாவட்டத்தின் பல இடங்களில் மணல் திருட்டு அதிகம் நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஒவ்வொரு உட்கோட்டத்திலும் மணல் கடத்தலைத் தடுக்க தனிப்படையும், மாவட்ட அளவில் தனிப்படை ஒன்றும் அமைத்துக் கண்காணிக்கிறோம். இரவு நேரத்தில் ரோந்து செல்ல உத்தரவிட்டுள்ளேன். தினமும் 1 முதல் 4 மணல் திருட்டு வழக்குகள் பதியப்படுகின்றன. மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் காவல் துறையினர் குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்