ஏஎம்என் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் இணையம் மூலம் நடத்தப்பட்ட பரத நிகழ்ச்சிக்கு கின்னஸ் விருது

By செய்திப்பிரிவு

ஏஎம்என் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் இணையம் மூலம் 650-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பங்கேற்ற பரதநாட்டியம் நிகழ்வுக்கு கின்னஸ் விருது கிடைத்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஏஎம்என் சர்வதேச குழுமத்தின் அங்கமான ஏஎம்என் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 650-க்கும் மேற்பட்ட பரதக் கலைஞர்களை இணையம் மூலம் ஒன்றிணைத்து, ஒரே நேரத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி நடத்தப்பட்டது.

3 நிமிடம் 20 நொடிகள் பாடப்பட்ட பாடலுக்கு அனைவரும் பரதநாட்டியம் ஆடினர். ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் இணையம் மூலம் பங்கேற்று நடனம் ஆடியதால் இந்நிகழ்ச்சிக்கு, நேற்று முன்தினம் (ஆக.29) கின்னஸ் விருது கிடைத்துள்ளது.

இந்த விருது பாரத நாட்டில் உள்ள அனைத்து பாரம்பரிய நடனக் கலைஞர்களுக்கும் சமர்ப்பிக்கப்படுவதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

வணிகம்

25 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

57 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்