காஞ்சிபுரம் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு; சாயப்பட்டறை கால்வாய் அடைப்பை நீக்கியபோது விபரீதம்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் அருகே சாயப்பட்டறை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும்போது விஷவாயுவை சுவாசித்த 2 பேர் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை பகுதியில் அதிக அளவில் சாயப்பட்டறைகள் உள்ளன. இந்த சாயப்பட்டறை கழிவுகள் செல்வதற்காக தனியாரால் ஒரு புதைச்சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதைச்சாக்கடையில் நேற்று அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த அடைப்பை நீக்குவதற்காக வள்ளுவப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன்(36) புதைச்சாக்கடைக்குள் இறங்கியுள்ளார். அப்போது அவர் அதில் இருந்த விஷவாயுவை சுவாசித்ததால் மயங்கி விழுந்தார். உடனே, முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுனில்(26) என்பவர் இவரை காப்பாற்ற உள்ளே இறங்கியுள்ளார். அவரும் விஷவாயுவை சுவாசித்ததால் மயங்கினார். இருவரும் புதைச்சாக்கடைக்குள் சிக்கினர். உடனே அங்கிருந்தவர்கள் ஓடிவந்து சிறிது நேரத்தில் சுனிலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் செல்லும் வழியிலேயே இறந்தார்.

அதற்குள் புதைச்சாக்கடைக்குள் தண்ணீர் வந்துவிட்டதால் லட்சுமணனை மீட்க முடியவில்லை. பின்னர் தீயணைப்புத் துறையினர் வந்து ஒரு மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு அவரை சடலமாக மீட்டனர். முத்தியால்பேட்டை பகுதியில் இருவர் விஷவாயுவால் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

25 mins ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

மேலும்