செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு: தலைமைச் செயலாளர் ஆய்வு

By செய்திப்பிரிவு

செங்கை மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தலைமையில் நேற்று மறைமலை நகர் நகராட்சியில் நடைபெற்றது.

இதில், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், டிஜிபி ஜெ.கே.திரிபாதி, மாவட்ட கரோனா தடுப்புகண்காணிப்பு அலுவலர் உதயசந்திரன், ஆட்சியர் ஜான் லூயிஸ், வருவாய் அலுவலர் பிரியா, காவல் கண்காணிப்பாளர் கண்ணன்மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்துக்குப் பிறகு தலைமைச் செயலர் கே.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்றை கட்டுப்படுத்த செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சிறப்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிகம் பாதிப்புள்ள பகுதிகளில் குழுக்கள் அமைத்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம். மக்கள்பங்களிப்புடன் விழிப்புணர்வு, ஆய்வுகள், மருத்துவ முகாம்போன்றவை மேற்கொள்ளப்படஉள்ளன. சென்னையை போல் செங்கல்பட்டிலும் சிறப்பு கவனம் செலுத்தி கரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு குழுக்கள் செங்கல்பட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசின் தடுப்பு விதிமுறைகளை மீறும் தொழில் நிறுவனங்கள் ‘சீல்’ வைக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

தமிழகம்

40 mins ago

வணிகம்

55 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

மேலும்