தமிழக காவல் புலனாய்வு பிரிவில் சிறப்பான பணிக்காக 5 பெண் அதிகாரிகள் உட்பட 6 பேருக்கு பதக்கம்: மத்திய உள்துறை அமைச்சகம் வழங்குகிறது

By செய்திப்பிரிவு

குற்ற வழக்குகளில் சிறப்பாகப்புலனாய்வு செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்த காவல் துறையினருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கங்கள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

அதன்படி 2020-ம் ஆண்டுக்கானபதக்கம் பெறுவோர் பட்டியல்நேற்று வெளியிடப்பட்டது. இந்தியஅளவில் காவல் துறையைச் சேர்ந்த 121 பேருக்கு வழங்கப்படுகிறது. இதில் 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 6 பேரில் 5 பேர் பெண் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்ட காவல் ஆய்வாளர் ஜி.ஜான்சிராணி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்எம்.கவிதா, நீலகிரி அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் ஏ.பொன்னம்மாள், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையஆய்வாளர் சி.சந்திரகலா, பெரம்பலூர் மாவட்ட மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ஏ.கலா,சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் டி.வினோத்குமார் ஆகிய 6 பேரும் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ஏ.கண்ணன் ஆகியோர் பதக்கங்களைப் பெறுகின்றனர்.

மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்டிரா காவல் துறையை சேர்ந்த தலா10 பேர், உத்தரப்பிரதேசம் காவல் துறையைச் சேர்ந்த 8 பேர், கேரளா,மேற்கு வங்க காவல் துறையைச்சேர்ந்த தலா 7 பேர், சிபிஐயை சேர்ந்த 15 பேர் உள்ளிட்ட 121 பேர் பதக்கப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

15 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

45 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

56 mins ago

வாழ்வியல்

47 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்