கரோனா தொற்று பாதிப்பில் இருந்து 3,374 கர்ப்பிணிகள் குணமடைந்தனர்: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் 3,374 கர்ப்பிணிகள் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்று சிகிச்சைக்காக 1,000 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போதுடவர்-3 கட்டிடத்தில் மேலும் 1,000படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிகிச்சைப் பிரிவை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனை டீன் தேரணிராஜன் உடன் இருந்தார்.

தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனையில் நடைபெற்றநிகழ்ச்சியில் அமைச்சர் முன்னிலையில் சென்னை ரோட்டரி கிளப் ஆப் கிண்டி அமைப்பினர் ரூ.80லட்சம் மதிப்புள்ள, நோயாளிகளை அழைத்துச் செல்லும் வாகனம்மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனை டீன் வசந்தாமணி, அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் பாலாஜி, ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் முத்துபழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் கூறியதாவது:

சென்னை அரசு பொது மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு 1,000 படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளன. டவர்-3 கட்டிடத்தில் மேலும் 1,000 படுக்கைகள்அமைக்கப்பட்டுள்ளன. இதே கட்டிடத்தில் 150 ஐசியு படுக்கைகள்மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 3,374கர்ப்பிணிகள் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குழந்தைகளும் நலமாக உள்ளன. இ-சஞ்சீவினி திட்டத்தில்தமிழகத்தில் 740 மருத்துவர்கள்ஆன்லைனில் ஆலோசனை வழங்குகின்றனர்.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்