வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்ட சென்னை பெருநகர காவல் ஆணையாளர்

By செய்திப்பிரிவு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முழு ஊரடங்கையொட்டி அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல் அருகே காவல் குழுவினரின் வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில் சென்னை பெருநகர் முழுவதும் காவல் குழுவினர் அமைத்தும், பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்தும், தீவிரமாக கண்காணித்து 144 தடை உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், அவர்கள் இன்று (19.7.2020) மாலை அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல் அருகில் முழு ஊரடங்கையொட்டி காவல் குழுவினர் மேற்கொண்டு வரும் வாகனத் தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அறிவுரைகளை வழங்கினார்.

இந்நிகழ்வின்போது கிழக்கு மண்டல இணை ஆணையாளர் R.சுதாகர், போக்குவரத்து காவல் இணை ஆணையாளர் (தெற்கு) திருமதி.எஸ்.லஷ்மி, திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் ஜி.தர்மராஜன் போக்குவரத்து துணை ஆணையாளர் (கிழக்கு) எஸ்.ஆர்.செந்தில்குமார் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

கருத்துப் பேழை

19 mins ago

சுற்றுலா

56 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

3 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்