கரோனா தொற்றாளர்களுக்கு தரமற்ற சிகிச்சை அளிக்கப்படுகிறதா?

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் மேட்டுப்பாளையம், வில்லியனூர் பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட் டோர் கதிர்காமம் அரசு மருத்து வமனைக்கு அழைத்து செல்லப் பட்டு, பின் மதகடிப்பட்டு மணக் குள விநாயகர் மருத்துவக் கல்லூ ரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு, சிகிச்சைக்கு அனுமதிக் கப்பட்டவர்களில் சில பெண்கள் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட் டுள்ளனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:

மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, அங்குள்ள பாலிடெக்னிக் வகுப் பறையில் நேற்று முன்தினம் தங்க வைக்கப்பட்டோம். மருந்தும் கொடுக்கவில்லை, மருத்துவரும் இல்லை. இரவில் பூச்சிகள் நடமாட்டமிருந்தது. உடல் பரிசோ தனை செய்யவில்லை.

நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் உணவு தரவில்லை. போன் செய்தால் மருத்துவர்கள் வருவார்கள் என்கிறார்கள். சிகிச்சை தாருங் கள். இல்லாவிட்டால் வீட்டுக்கு அனுப்பி விடுங்கள் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த வீடியோ பதிவு புதுச்சேரி நகரில் வைரலாக பரவியது.

இதுகுறித்து சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் மோகன் குமாரிடம் கேட்டதற்கு, “மருத்து வக் கல்லூரிக்கு ஏராளமானோர் வந்து செல்வதால் பாலிடெக்னிக் கல்லூரி வகுப்பறையில் தனியாக சிகிச்சை தரப்படுகிறது. போதிய மருத்துவர்கள் சிகிச்சைக்கு உள்ளனர். உணவும் தரப்படுகிறது. சுகாதாரத் துறையினரும் அங்கு உள்ளனர். எனினும் இதுகுறித்து முழுமையாக விசாரிப்போம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்