அடுத்த மாதத்தில் ரயில், பேருந்துகளை இயக்கலாம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று எப்போது குறையும் என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) முன்னாள் இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

சென்னையில் வைரஸ் தொற்றின் பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. அதேநேரத்தில், சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்தகட்டமாக, சிறிய நகரங்களில் பாதிப்பு ஏற்பட்டு பின்னர் குறையும். கிராமங்களில் குறைவான அளவே பாதிப்பு இருக்கும். நவம்பர் மாதம் இறுதியில் வைரஸ் தொற்றின் பாதிப்பு குறைந்துவிடும். இனிமேல் ஊரடங்கு தேவையில்லை.

அடுத்த மாதத்தில் (ஆகஸ்ட்) இருந்து ரயில்கள், பேருந்துகளை இயக்கலாம். குறிப்பாக, இன்னும் சில மாதங்களுக்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மீண்டும் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்காமல் இருக்க வெளியே செல்லும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு நன்றாக கை கழுவ வேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள், அலுவலகங்கள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்க்குகள், அடுக்குமாடி குடியிருப்புகள், சூப்பர் மார்க்கெட்டுகள், கடைகளின் நுழைவு வாயில் பகுதியில் கை கழுவும் வசதியை ஏற்படுத்த வேண்டும். அனைவரும் சோப்பு போட்டு கைகளை கழுவிய பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

வலைஞர் பக்கம்

40 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்