ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருப்பி கொடுக்க உத்தரவு

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் ஊரடங்கின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்களிடம் திருப்பிக் கொடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்குஅமலில் உள்ளது. கடந்த 105 நாட்களில் ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித் திரிந்தவர்கள் மீது7 லட்சத்து 50 ஆயிரத்து 620 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 8 லட்சத்து 23 ஆயிரத்து 488 பேர்கைது செய்யப்பட்டு ஜாமீனில்விடுதலை செய்யப்பட்டனர். 6 லட்சத்து 24 ஆயிரத்து 720வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 17 கோடியே 37 லட்சத்து 57 ஆயிரத்து 276 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கில் தேக்கம்

ஊரடங்கின்போது பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு பின்னரே உரிமையாளர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டன. இந்நிலையில் லட்சக்கணக்கான வாகனங்கள் தேங்கியதால், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அபராதம் வசூலித்துவிட்டு, உரிமையாளர்களிடம் திருப்பிக் கொடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்