தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் தொடர அனுமதிக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர அனு மதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்தத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், முதல் வர் பழனிசாமியை மத்திய மின் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) ராஜ்குமார் சிங் நேற்று சந் தித்து பேசினார். அப்போது தலைமைச் செயலர் கே.சண்முகம், மின் துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், மின்வாரிய தலைவர் பங்கஜ்குமார் பன்சால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, முதல் வர் அளித்த கோரிக்கை கடிதம்:

தமிழகம், நாட்டிலேயே 49.47 சதவீதம் புதுப்பிக்கத்தக்க மின் நிறுவுதிறன் கொண்டது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை 15,410 மெகாவாட் மின்நிறுவு திறன் சேர்க்கப்பட்டுள்ளது. தற் போது மின் உபரி மாநிலமாக திகழ் கிறது. விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடர வேண்டும் என்பது மாநில அரசின் நிலையான கொள்கை. மேலும், வீட்டு இணைப் புக்கு 100 யூனிட் இலவச மின் சாரம் வழங்கப்படுகிறது. இந்த இரு திட்டங்களிலும் திருத்தச் சட்டத்தில் கூறப்படுவதைப்போல நுகர்வோரின் வங்கிக்கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்த முடி யாது. அந்த இணைப்புகளுக்கான மானியங்கள் மின் வாரியத்துக்கு அரசே நேரடியாக வழங்குகிறது.

தனியார் நிறுவனங்களை அனுமதித்தால் பொதுமக்களுக் கும் அரசு நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். நீர்மின்சார கொள் முதலையும் புதுப்பிக்கத் தக்க எரி சக்தி கொள்முதலையும்ஒட்டு மொத்தமாக நிர்ணயிக்க வேண்டும். விவசாய மின் மோட்டார்களுக்கு 100 சதவீத மானியத்துடன் தனியாக சூரிய மின்சக்தி தொடரமைப்புகள் மூலம் இணைப்பு வழங்கலாம். நிலுவைத் தொகைகளை வழங்கும் வகையிலான ரூ.90 ஆயிரம் கோடி தொகுப்பு திட்டத்தை வரவேற் கிறோம். டான்ஜெட்கோ கோரி யுள்ள ரூ.20,622 கோடி நிதி யுதவியை வட்டிச்சலுகையுடன் வழங்க வேண்டும்.

மறுசீரமைக்கப்பட்ட துரிதப் படுத்தப்பட்ட மின் மேம்பாடு மற்றும் சீர்திருத்த திட்டத்தின் பிரிவு -ஏ திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.268 கோடியே 86 லட்சத்தையும் பிரிவு -பி திட்டத்தின் கீழ் கடனாக வழங்க வேண்டிய ரூ. 1,330 கோடியே 93 லட்சத்தையும் மானியமாக வழங்க வேண்டும். தமிழ்நாடு மின்சார மேம்பாட்டு முகமைக்கு வழங்க வேண்டிய ரூ.50 கோடியே 88 லட்சத்தை விரைவில் விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்