தமிழகத்தில் வழக்கத்தைவிட இதுவரை தென்மேற்கு பருவமழை 11% அதிகம்: வானிலை மைய இயக்குநர் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட இதுவரை 11 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்்களிடம் கூறிய தாவது: தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் வடக்கு வங்கக்கடல் முதல், ராஜஸ்தான் வரை பருவக்காற்று அச்சு நிலவும். அப்போது தமிழகம் தவிர இதர மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களுக்குதான்அதிக மழை கிடைக்கும். இந்த அச்சு இமயமலைக்குநகர்ந்தாலோ, நாட்டின் பிற பகுதிகளில் பருவமழைகுறைந்தாலோ தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு நல்ல மழை கிடைக்கும். கடந்த ஆண்டுஅதுபோன்ற சூழலால் தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்துக்கு நல்ல மழை கிடைத்தது.

வழக்கமாக ஜூன் 1 முதல் ஜூலை 6 வரை 65 மி.மீ.மழை பெய்ய வேண்டும். இந்த ஆண்டு 72.3 மி.மீ. மழைபெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 11 சதவீதம் அதிகம்.அதிகபட்சமாக நீலகிரியில் 250 மி.மீ., கன்னியாகுமரியில் 201 மி.மீ. மழை பெய்தாலும், அது வழக்கத்தைவிட முறையே 17 சதவீதம், 9 சதவீதம் குறைவுதான். அதேநேரம், கரூரில் 294 சதவீதம், ராமநாதபுரத்தில் 202 சதவீதம்மழை வழக்கத்தைவிட அதிகமாக பெய்துள்ளது. ஜூலை 9, 10-ல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்