என்எல்சி கொதிகலன் விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

By செய்திப்பிரிவு

நெய்வேலி என்எல்சியில் கொதிகலன் வெடித்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழக, தெலங்கானா ஆளுநர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: என்எல்சியில் கொதி கலன் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தி னருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: நெய் வேலி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித் துக் கொள்கிறேன்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: இந்த விபத்து அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது. இக்கோர விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங் களை தெரிவித் துக்கொண்டு, காயமடைந்தோர் விரைவில் நலம்பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டா லின்: என்எல்சியின் பாதுகாப்பு என்பது மிகமிக மோசமான நிலைமையில் இருப்பதை இந்த விபத்து உணர்த்துகிறது. உரிய காலத்தில் பராமரிப்பு செய்யப்படாததே இதற்கு காரணம். உயிரிழந்தோரின் குடும் பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி: உயிரிழந்தவர்களின் குடும்பத் தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: நீண்ட காலத்துக்கு முன் நிறுவப்பட்ட அனல்மின் நிலையங்களை பரா மரிப்பதில் ஏற்பட்ட கவனக்குறைவு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்: என்எல்சி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தேமுதிக தலைவர் விஜய காந்த்: என்எல்சியில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் பலர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக் கிறது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: அனல்மின் நிலையங் களில் ஏற்படும் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க உடனடியாக தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைத்து ஆய்வு நடத்த வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: அனல்மின் நிலையத்தில் பாய்லர் பராமரிக்கும் பணிகளை தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்ப டைத்ததே விபத்துக்கு காரணம்.

இந்திய கம்யூ. மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன்: என்எல்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் கடந்த 6 மாதங்களில் 3 விபத்துகள் நடைபெற்றுள்ளன.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும்.

பாமக இளைஞரணித் தலை வர் அன்புமணி ராமதாஸ்: தொழிலாளர்கள் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு என்எல்சி நிர்வாகம்தான் பொறுப் பேற்க வேண்டும்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி யின் தலைவர் தி.வேல் முருகன்: உயிரிழந்த தொழிலாளர்கள் குடும் பத்துக்கு தலா ரூ.1 கோடியும், குடும்பத்தில் ஒருவருக்கு என்எல்சி யில் நிரந்தர வேலையும் வழங்க வேண்டும்.

இதேபோல, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோரும் இரங்கல் தெரி வித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 mins ago

வணிகம்

25 mins ago

இந்தியா

27 mins ago

சினிமா

33 mins ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்