பல்லுயிர் பெருக்க மண்டலங்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் வேடந்தாங்கலை சிதைக்க தமிழக அரசு முனைவது கண்டனத்திற்குரியது; தினகரன்

By செய்திப்பிரிவு

வேடந்தாங்கலை சிதைக்க தமிழக அரசு முனைவது கண்டனத்திற்குரியது என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பாதுகாப்பு வளைய பரப்பை சுருக்குவது தொடர்பாக, தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டுள்ளது. வேடந்தாங்கல் சரணாலயத்தில் சுமார் 40 விழுக்காடு பரப்பில், தொழில் துறை சார்ந்த உரிமங்களை வழங்க தமிழக அரசு முனைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப் பகுதியை, 3 கிலோ மீட்டர் என்கிற அளவுக்குச் சுருக்குவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, தேசிய காடுகள் உயிரியல் வாரியத்திடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்து இருக்கின்றது.

இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூன் 8) தன் ட்விட்டர் பக்கத்தில், "வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய நிலத்தைச் சுருக்கி கட்டுமானங்களைச் செய்வதற்கு தமிழக அரசு முயற்சிப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

உலகம் முழுக்க சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்லுயிர் பெருக்க மண்டலங்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், அப்படிப்பட்ட இடமான வேடந்தாங்கலை சிதைக்க முனைவது கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதியளிக்கக் கூடாது" என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 mins ago

ஜோதிடம்

21 mins ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

மேலும்