கீழடி அகழாய்வில் விலங்கின எலும்பு கண்டுபிடிப்பு

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் விலங்கின எலும்பு கண்டுபிடிக்கப்பட்டது.

திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.19-ம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே குழிகள் தோண்டப்பட்டன. மணலூரில் பணிகள் தொடங்கவில்லை. மேலும் ஊரடங்கால் மூன்று இடங்களிலும் மார்ச் 24-ம் தேதி அகழாய்வு பணியை தொல்லியல்துறை நிறுத்தியது.

இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டநிலையில் மே 20-ம் தேதி மீண்டும் கீழடி, அகரத்தில் அகழாய்வுப் பணி தொடங்கியது. தொடர்ந்து மே 23-ம் தேதி முதல் முறையாக மணலூரிலும் பணிகள் தொடங்கின.

மே 27-ம் தேதி கொந்தகையில் பணி தொடங்கியது. ஊழியர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பணி செய்து வந்தனர்.

இந்நிலையில் மே 28-ம் பெய்த பலத்த மழையால் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை அகழாய்வு நடந்த இடங்களில் தண்ணீர் புகுந்தது.

இதையடுத்து 4 இடங்களிலும் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன. தண்ணீர் வற்றியநிலையில் சிலதினங்களுக்கு முன் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கின.

மணலூரில் தோண்டப்பட்ட ஒரு குழியில் சுடுமண்ணால் ஆன உலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கீழடியில் விலங்கின எலும்பு கண்டுபிடிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

35 secs ago

சினிமா

5 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்