ஆலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்: தொழிற்சாலை பாதுகாப்பு இயக்குநர் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தொழிற்சாலைகளில் மேற்கொள் ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செலவாக நினைக்காமல், லாபத்துக்கான முதலீடாக கருதி நடவடிக்கைகளை எடுக்க வேண் டும் என்று தமிழ்நாடு தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக் குநர் சி.ஞானசேகரபாபு ராவ் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு தொழிற்சாலை பாதுகாப்பு, சுகாதார இயக்குநர கம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் சேலம் மண்டல துணைக்குழு சார்பில் ‘தோல் தொழிற்சாலையில் பாதுகாப்பு மேலாண்மை’ என்ற பயிலரங் கம் வேலூரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தொழிற்சாலை பாதுகாப்பு இயக்குநர் ஞானசேகர பாபு ராவ் பேசியதாவது:

ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் தோல் தொழிற் சாலைகளுக்கான பொதுக் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் (சிஇடிபி) நடந்த விபத்து, தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக் கான பாதுகாப்பு நடைமுறைகள் மீது தேசத்தின் கவனத்தை திருப் பியுள்ளது.

இதுபோன்ற விபத்துகளை தடுக்க, தோல் தொழிற்சாலை களுக்கான பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் தொடர் கண்காணிப்பை சிஇடிபி உறுப் பினர்கள் உறுதி செய்ய வேண் டும்.

தற்காப்புக் கருவிகளை தொழிலாளர்கள் பயன்படுத்து கிறார்களா என்பதை தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். தமிழ் தெரியாத வெளி மாநில தொழி லாளர்களை பணியமர்த்தும் போது, தகவல் பரிமாற்ற குறைபாடுகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிற்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை செலவாக நினைக்காமல், முழு பாதுகாப் புடன் கூடிய லாபத்துக்கான முதலீடாக கருத வேண்டும். பாது காப்பு நடவடிக்கைகளை தோல் தொழிற்சாலைகள் மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மும்பையில் உள்ள தொழிற் சாலைகளுக்கான ஆலோசனை சேவை மற்றும் தொழிலாளர் மையத்தின் துணை தலைமை இயக்குநர் ஆர்.கே.இளங்கோ வன், தொழிற்சாலை பாதுகாப்பு இயக்குநரக கூடுதல் இயக்குநர் எஸ்.பொன்சிங் மோகன்ராம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் சேலம் மண்டல துணைக்குழு ஒருங்கிணைப்பாளர் சி.ஆர்.துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 mins ago

இந்தியா

4 mins ago

சினிமா

10 mins ago

ஓடிடி களம்

42 mins ago

கல்வி

56 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்