ஜூன் 1-ம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம்- அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

By செய்திப்பிரிவு

விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர்நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, தற்போது அமல்படுத்தப்படும் ஊரடங்கை கருத்தில் கொண்டு, இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப். 15 முதல்மே 31 வரையான 47 நாட்களுக்கும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 15 முதல் ஜூலை 31 வரையான 47 நாட்களுக்கும் தனியுரிமைபொருளாதார மண்டலத்தில் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்படும் என்ற திருத்திய ஆணையை மத்திய மீன்வளத் துறை வெளி யிட்டுள்ளது.

இதனால், தொழில் நிறுத்தம் செய்துள்ள தமிழக கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல்மீன்பிடிக்கச் செல்லலாம். மேற்குகடற்கரை பகுதியில் விசைப்படகு களுக்கு 61 நாளில் இருந்து 47 நாட்களாக மீன்பிடி தடைக் காலம் குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக அப்பகுதி மீனவர்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

36 mins ago

சினிமா

52 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்