மத்திய அரசு வழங்க வேண்டிய நெல் அரவை மானியம் ரூ.2,609 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் பாஸ்வானிடம் அமைச்சர் காமராஜ் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

மத்திய அரசு வழங்க வேண்டிய நெல்லுக்கான அரவை மானிய நிலுவை ரூ.2 ஆயிரத்து 609 கோடியை விரைவாக வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானிடம் அமைச்சர் ஆர்.காமராஜ் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

காணொளிக் காட்சியில் ஆய்வு

உணவுத் துறை நடவடிக்கைகள் குறித்து மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காணொலிக் காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் தமிழகம் சார்பில் அமைச்சர் ஆர்.காமராஜ் பங் கேற்று, தமிழக உணவுத் துறை செயல்பாடுகள், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய நிதி குறித்து கோரிக்கை விடுத்தார். உடன், உணவுத் துறை செயலர் தயானந்த் கட்டாரியா உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

அப்போது அமைச்சர் காமராஜ் பேசியதாவது:

பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி வழங்கும் திட்டத்துக்காக 5 லட்சத்து 36 ஆயிரத்து 5 மெட்ரிக் டன் அரிசியை மத்திய அரசு ஒதுக்கியது. தமிழக அரசு, அதில் 5 லட்சத்து ஆயிரத்து 659 மெட்ரிக் டன் அரிசியை ஏப்ரல் மாதத்தில் 96.3 சதவீதமும், மே மாதத்தில் 85 சதவீதம் அளவுக்கும் வழங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கும் அந்த அரிசியை வழங்க முடிவெடுத்து, ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 813 மெட்ரிக் டன் அரிசியை கிலோ ரூ.22 என்ற விலையில் இந்திய உணவுக் கழகத்திடம் வாங்கியுள்ளது.

96 சிறப்பு ரயில்கள்

நெல்லுக்காக மத்திய அரசு வழங்க வேண்டிய அரவை மானிய நிலுவை ரூ.2 ஆயிரத்து 609 கோடியை விரைவாக வழங்க வேண்டும்.

கடந்த மே 20-ம் தேதி வரை தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 42 வெளிமாநிலத்தவர் 96 சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளனர் என்றார்.

‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’

அமைச்சர் காமராஜ் மேலும் பேசியபோது, “தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான பயோமெட்ரிக் இயந்திரங்கள், விற்பனை முனைய இயந்திரங்கள் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. எங்கள் தரப்பில் பணிகள் அனைத்தும் செப்டம்பர் மாதத்துக்குள் முடிந்துவிடும்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்