திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.385 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.385 கோடியில் அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 19) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் 2017-18 ஆம் கல்வியாண்டில் புதுக்கோட்டையில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியும், 2019-20 ஆம் கல்வியாண்டில் கரூரில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வந்த ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியானது 2019-20 ஆம் கல்வியாண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

மேலும், மத்திய அரசின் நிதியுதவியுடன், கடந்த 2019-ம் ஆண்டில், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தமிழக அரசு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று சரித்திர சாதனையைப் படைத்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் 868.22 ஹெக்டேர் நிலப்பரப்பில் 150 எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்கையுடன் புதிய திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது. இம்மருத்துவக் கல்லூரி நிறுவிட மத்திய அரசு 60 விழுக்காடு பங்களிப்பாக 195 கோடி ரூபாய் நிதியை வழங்கும். எஞ்சிய 190 கோடியே 63 லட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கும்.

இப்புதிய அரசு மருத்துவக் கல்லூரி நிறுவிட 385 கோடியே 63 லட்சம் ரூபாய் அனுமதித்து நிர்வாக ஒப்புதலையும், முதல் கட்டமாக 70 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்தும் 18.12.2019 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக் கட்டிடங்கள் 143 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மருத்துவமனைக் கட்டிடங்கள் 165 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், குடியிருப்பு மற்றும் விடுதிக் கட்டிடங்கள் போன்றவை 77 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படும்.

இந்நிலையில் இன்று (மே 19) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

6 mins ago

கருத்துப் பேழை

49 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்