கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பொட்டாஷ் விலை மூட்டைக்கு ரூ.75 குறைப்பு- இன்று முதல் அமலுக்கு வருகிறது

By செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பொட்டாஷ் உரம் விலைமூட்டை ஒன்றுக்கு ரூ.75 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்றுமுதல் (மே 18) அமலுக்கு வருவதாக இந்திய பொட்டாஷ் நிறுவனத் தலைவர் பி.எஸ்.கெலாட் அறிவித்துள்ளார்.

இந்தியன் பொட்டாஷ் நிறுவனம்,விவசாயத்தின் முக்கிய இடுபொருளான பொட்டாஷ் உரத்தை (எம்ஓபி) கடந்த 65 ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிசெய்து இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு மற்றும் உர வியாபாரிகள் மூலமாக விநியோகம் செய்து வருகிறது.பொட்டாஷ் உரம், பயிரின் வளர்ச்சிக்கும், பயிரின் தரத்துக்கும் மிகவும் அவசியமானது.

பயிர் வளர்ச்சியில் முக்கிய பங்கு

மேலும், இந்த உரம் புரோட்டீன்கள், சர்க்கரை உற்பத்தியில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. செடிகளின் ஈரப்பதத்தை பாதுகாத்து, வறட்சியைத் தாங்கும் சக்தியைத் தருகிறது. இப்படி பல வகையில் பயிர் வளர்ச்சிக்கு தேவைப்படும் பொட்டாஷ் உரத்தின் விலையை, கரோனா வைரஸ் பரவல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, குறைப்பதற்கு இந்த பொட்டாஷ் நிறுவனம் முடிவுசெய்தது. அதன்படி, “பொட்டாஷ் உரத்தின் விலை 950-ல் இருந்து மூட்டை ஒன்றுக்கு ரூ.75 குறைத்து ரூ.875-க்கு இன்றுமுதல் (மே 18)விற்பனை செய்யப்படும்” என்று இந்தியன் பொட்டாஷ் நிறுவனத் தலைவர் பி.எஸ்.கெலாட் அறிவித் துள்ளார்.

பொட்டாஷ் இறக்குமதி செய்யும் வெளிநாடுகளில் தரப்படும் விலை குறைப்பை அப்படியே இந்திய விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த விலை குறைப்பு செய்யப்பட்டிருப்பதாக வேளாண் துறை அதிகாரி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 mins ago

கருத்துப் பேழை

10 mins ago

சுற்றுலா

47 mins ago

சினிமா

52 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்