மதுரையில் 50 சதவீதம் இயல்பு நிலை திரும்பியது: கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத ஒருசில மக்கள்

By என்.சன்னாசி

மதுரையில் 47 நாட்களுக்கு பின், சிலதளர்வுகள் அடிப்படையில் 50 சதவீத கடைகள், தொழில் நிறுவனங்கள் திறக்கப்பட்டு, வழக்கமான இயல்பு நிலை திரும்பியது.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் 22ம் தேதி நாடு முழுவதும் ஒருநாள் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மார்ச் 24ம் தேதி முதல் மார்ச் 3ம்தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

அத்தியாவசியத் தேவைக்கான கடைகள் தவிர, எஞ்சிய வர்த்தக நிறுவனங்கள், தொழிற் சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள், போக்குவரத்து என, முற்றிலும் முடக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியாவில் கரோனா தொற்று அதிகரிப்பை கருத்தில் கொண்டு மேலும், மார்ச் 17-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு, அமலில் உள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதலில், தமிழக அமைச்சரவை எடுத்த முடிவின்படி மக்கள் நலன் கருதி தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, எஞ்சிய இடங்களில் வழக்கமான பணிகளை உரிய பாதுகாப்புடன் மேற்கொள்ள அரசு அனுமதி அளித்து, அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன்படி,சலூன், ஸ்பா, அழகு நிலையங்கள் தவிர்த்து, டீக்கடைகள், உணவகம், பேக்கரி, கட்டுமான பொருட்கள் விற்பனை, மின்சாதன பொருட்கள் விற்பனை மற்றும் குளிர் சாதன வசதியற்ற சில நிறுவனங்கள் என, 34க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் , தொழில் நிறுவனங்கள் நேற்று திறக் கப்பட்டன.

மதுரையில் அரசு அறிவித்தபடி, 50 சதவீதக்கு மேலான வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் சிறு, குறு தொழில்கள் உள்ளி ட்ட கடைகளும் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது. டீக் கடை, உணவங்களில் ஆட்கள் சாப்பிட அனுமதியின்றி பார்சல் மட்டுமே வழங்கினர்.

பேருந்து, ஆட்டோ போக்குவரத்து இன்றி, சொந்த வாகனங்களில் சென்ற மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். பல இடங்களில் சமூக விலகல் பின்பற்றினர். சில இடங்களில் முகக்கவசமின்றி சமூக விலகல் கடைபிடிக்கவில்லை.

தங்களது கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் விதிமுறைகளை பின்பற்ற உரிமையாளர் களும் வலியுறுத்தவில்லை. அது போன்ற இடங்களில் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், ஆங்காங்கே போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கூட்டமாக இருந்த இடங்களில் சமூக இடைவெளியே பின்பற்ற அறிவுறுத் தினர். வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்களில் வெளியில் ஓரிரு ஊழியர்கள் நிறுத்தப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, தனித் தனியாக உள்ளே அனுமதித்தனர்.

மதுரை மாசி வீதிகள், திண்டுக்கல் ரோடு,டவுன்கால் ரோடு, மார்க் கெட், நகைக்கடை, ஜவுளிக்கடை பஜார் போன்ற இடங்களில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று ஓரளவு மக்கள் நடமாட்டம் இருந்தது. சாலைகளில் பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் எண்ணிக்கை மட்டுமே அதிகமான தென்பட்டன.

45 நாட்களுக்கு பிறகு, வர்த்தக நிறு வனம், கடைகளை திறந்தவர்கள் வாசலில் மஞ்சள் கலந்த தண்ணீர், கிருமிநாசினி தெளித்து திறந்தனர். தொழிற்சாலை, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் செயல்பட துவங்கினர்.

சமூக விலக பின்பற்ற வெள்ளைக் கோடுகள் வரைந்து இருந்தனர். 50 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பினாலும், போக்குவரத்து இன்றி பெரும்பாலான இடங்களில் பொது மக்கள் அதிகம் வெளியில் வரவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 mins ago

இந்தியா

1 min ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

47 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்