கரோனாவால் வெளிநாடுகளிலிருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்கள்; தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்கக் குழு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பால் வெளிநாடுகளிலிருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை ஈர்க்க தலைமைச் செயலர் தலைமையில் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, தைவான் உள்ளிட்ட நாடுகளில் தொழில் நிறுவனங்களைச் செயல்படுத்த முடியாமல் வெளியேறும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

கரோனா பாதிப்பால் அங்கு தொழில் செய்ய முடியாத நிலையில் மேற்கண்ட நாடுகளில் உள்ள நிறுவனங்கள் அந்நாடுகளிலிருந்து வெளியேறி இந்தியாவில் தொழில் தொடங்கத் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில் இவ்வாறு இந்தியாவில் முதலீடு செய்ய உத்தேசித்துள்ள நிறுவனங்களை ஈர்க்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் ஒரு சிறப்புக் குழுவை அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு இடமாற்றம் செய்ய விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய வைப்பது இக்குழுவின் பணியாக இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

43 mins ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்