கரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளித்து பாதுகாக்க வேண்டும்- விஜயகாந்த் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால், தமிழக மக்களுக்கு வழங்குவது போல் நம்மைச் சார்ந்துள்ள ஆடு, மாடு, கோழி, நாய், பூனை போன்ற பல்வேறு கால்நடைகளுக்கும், பறவைகளுக்கும், உரிய பாதுகாப்பு வழங்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது கோடை காலமும் தொடங்கிய நிலையில் கால்நடைகள் உணவு, தண்ணீர் கிடைக் காமல் அவதிப்படுகின்றன. மேலும், அவற்றுக்கு கரோனா தொற்று அபாயமும் உள்ளது.

வவ்வால் மூலமும் கரோனாவைரஸ் பரவ வாய்ப்பு உள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளில் கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளித்து, பாதுகாப்பது நமது கடமையாகும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்